கோவை
3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவர், கோவையில் கள்ளக்காதலியுடன் கைகளை கட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கள்ளக்காதல் ஜோடியினர் எழுதிய கடிதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து கோவை போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதல் ஜோடி
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்தவர் மதிவாணன்(வயது45). கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் சரிதா(35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே காதல் இருந்து வந்தது. இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பிரிந்தது. அதன்பின்னர் மதிவாணனுக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இதேபோல் சரிதாவுக்கும், கேரள மாநிலத்தை சேர்ந்த சோபனன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று அனிதா, அனீஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் சரிதா கணவருடன் ஓமன் நாடு, மஸ்கட் நகரில் வசித்து வந்தார்.
பேஸ்புக் மூலம் தொடர்பு
இந்தநிலையில் ‘பேஸ்புக்’ மூலம் மீண்டும் மதிவாணன், சரிதாவுடன் தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் மீண்டும் சேர்ந்த வாழ முடிவு செய்தனர். இதனால் சரிதா 30 பவுன் தங்கநகை, ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றுடன் ஊர் திரும்பினார்.
காதலன் மதிவாணனை சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தங்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் சேர்ந்து வாழ விரும்பினார்கள். தொட்டு தாலி கட்டிய மனைவியும், 4 குழந்தைகளும் இருக்கிறார்களே என்பதை மறந்து மதிவாணனும் காதலியின் பேச்சை கேட்டு அவருடன் கிளம்பினார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதிவாணனும், சரிதாவும் கோவை அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினார்கள். சரிதாவின் 2 குழந்தைகளும் தாயுடன் இருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள சரவணம்பட்டியில் இருவரும் குடியேறினார்கள். மதிவாணன் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை கோவையில் செய்து வந்தார்.
இந்தநிலையில் சரிதாவின் சகோதரர், தன்னுடைய தங்கையை காணவில்லை என்று திருச்சூர் போலீசில் புகார் செய்தார்.
3 பெண்களை திருமணம் செய்தவர்
மதிவாணனின் மனைவி அனிதாவும் கணவரை காணாததால் பல இடங்களில் தேடினார். இந்தநிலையில் நெல்லை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில், மதிவாணன் என்னை திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால் எனக்கு தெரியாமலேயே களக்காட்டை சேர்ந்த மரகதம், மதுரையை சேர்ந்த சரோஜினி ஆகிய பெண்களையும் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியுள்ளார். இப்போது என்னையும், குழந்தைகளையும் பரிதவிக்க விட்டுவிட்டு கேரள மாநிலத்தை சேர்ந்த சரிதா என்ற 4–வது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். எனவே கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். போலீஸ் கமிஷனரின் உத்தரவின்பேரில், நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிவாணனை பல இடங்களில் தேடி வந்தனர்.
கள்ளக்காதலியுடன் தற்கொலை
போலீசார் தேடுவதை அறிந்த கள்ளக்காதல் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கோவை சரவணம்பட்டி, பெரிய வீதியில் உள்ள வீட்டில் மதிவாணனும், சரிதாவும் கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.
இதுகுறித்து சரிதாவின் குழந்தைகள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணங்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உயிர் பிழைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக மதிவாணன் தன்னுடைய கைகளை பின்புறமாகவும், சரிதா தனது கைகளை முன்புறமாகவும் கட்டிக்கொண்டு துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மதிவாணன், சரிதா ஆகியோர் தனித்தனியாக எழுதி வைத்து இருந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து மதிவாணனின் மனைவி அனிதா, மற்றும் சரிதாவின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை வந்து உடல்களை பார்த்து கண்ணீர் வடித்தனர். சரிதாவின் 2 குழந்தைகளும் அவருடைய உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். தாயை இழந்த சோகத்தில் குழந்தைகள் கதறி அழுதனர்.
3 பெண்களை திருமணம் செய்து கொண்டவர், 4–வதாக கள்ளக்காதலியுடன் கோவையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
news dailythanthi. thanks
No comments:
Post a Comment