
July 6, 2013 04:32 pm
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை இன்று 6.4அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சன்கைபெனு நகரத்திற்கு தென்மேற்கே 154 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 23 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4300கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மீட்புப்பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
. thamilan thanks
No comments:
Post a Comment