அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 6 July 2013

கிண்டியில் பரபரப்பு கூவிகூவி ஆண் குழந்தையை விற்க முயன்ற பெண் சிக்கினார்


[
கிண்டியில் பரபரப்பு கூவிகூவி
ஆலந்தூர்:கிண்டியில் ஆண் குழந்தையை விற்க முயன்ற பெண்ணை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

சென்னை கிண்டி பாரதி நகர் பகுதியில் இன்று காலை ஒரு பெண் கையில் பச்சிளங்குழந்தையுடன் சுற்றி, சுற்றி வந்தார். அந்த வழியாக சென்ற மக்களிடம் சென்று, ‘‘7 ஆயிரம் ரூபாய் கொடுத் தால் இந்த குழந்தையை தந்துவிடுகிறேன்‘‘ என்று கேட்டு கொண்டு இருந்தார். 

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, உதவி கமிஷனர் சீனிவாசன், எஸ்ஐ வெங்கட்டம்மா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பெண்ணை பிடித்து, குழந்தையை மீட்டனர். அவரை கிண்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். 

அந்த பெண்ணின் பெயர் மரகதம் (42). கணவர் சின்னதம்பி, திருச்சி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர். ஒரு மகன், மகள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. போலீசார் விசாரணையின்போது மாற்றி, மாற்றி பேசியுள்ளார். இதனால் அவர் சொல்வது உண்மையா என்று விசாரித்தனர். பின்னர் பெண்ணையும் குழந்தையையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் கிண்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
viyapu thanks

No comments:

Post a Comment