சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள பணியிடங்களில் பெண்களுக்கு 33 சதவிகித பணியிட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று, பெண் வழக்கறிஞர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த நீதிபதி அல்தாமஸ் கபீர் பதவிக் காலம் முடிந்து, நேற்று தமிழகத்தை தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகாஜி, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டி.பிரசன்னா, துணைத் தலைவர் நளினி ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடத்தை நிரப்புவதில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்றி அந்த இடங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நீதிமன்றங்களை நடத்தாமல், கூடுதல் நீதிமன்றங்களை அமைத்து, வார நாட்களிலேயே வழக்குகளை விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

NEWS 4tamilmedia THANKS
No comments:
Post a Comment