அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 July 2013

அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது?


அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதை தடுக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 முக்கிய அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு கட்டுப்பட்டது என்று, மத்திய தகவல் ஆணையம் கடந்த மாதம் 3ம் திகதி  அறிவித்து இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

 இதற்கான உத்தரவை ரத்து செய்யும் விதமாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதை அடுத்து அவசர சட்டம் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்  அளித்துள்ளது.  ஆனால், இதற்கு பாஜக, சமாஜ்வாதி   கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஒப்புதல்  வழங்கவில்லை. எனவே, புதிய மசோதாவை, எதிர்வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வர மத்திய அரசு முடிவு  செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த மசோதாவை  நிறைவேற்றினால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடியும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 2ல் பொது அமைப்புகளுக்கான வரையறை உள்ளது. இந்த வரையறைக்குள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வராது என்பதை தெளிவு படுத்தும் விதமாக திருத்தம்  செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

news 4tamilmedia thanks

No comments:

Post a Comment