அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 5 July 2013

மனிதனின் உயிரணுவில் இருந்து செயற்கை கல்லீரல் - விஞ்ஞானி சாதனை


மனிதனின் உயிரணுவில் இருந்து செயற்கை கல்லீரல் - விஞ்ஞானி சாதனை
July 5, 2013  11:28 am
உலகில் முதன்முறையாக செயற்கை முறையில் மூல உயிரணுவிலிருந்து (ஸ்டெம் செல்) கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.


கல்லீரல் பாதிக்கப்பட்டுமாற்று அறுவைச் சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளோருக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் யோகோஹாமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டாகானோரி டகேபே,ஹிதேகி டானிகுச்சி ஆகியோர் நிகழ்த்திய ஆராய்ச்சியில் உயிரணுவிலிருந்து வெற்றிகரமாக கல்லீரல் உருவாக்கப்பட்பட்டுள்ளது.

மனிதனின் உடலிலிருந்து எடுக்கப்படும் உயிரணுக்கள்பல்வேறு உடல் உறுப்புகளாக வளரக் கூடிய ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. இதை தகுந்த முறையில் தூண்டிவிடுவதன் மூலம்நமக்கு தேவைப்படும் உறுப்பை வளர்த்தெடுக்க முடியும். பெரும்பாலும்,மூளைச்சாவு அடைந்தோரின் முக்கிய உடல் பாகங்கள் நல்ல நிலையில் இருந்தால்அவை தானமாகப் பெறப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படும்.

இம்முறையில் கல்லீரலை தானமாகப் பெற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அதோடுஒரே பிரிவைச் சேர்ந்த ரத்தம் மற்றும் திசு வகை உள்ளவர்களிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற்று பொருத்தினாலும்சில சமயங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில்பாதிக்கப்பட்டவரின் உயிரணுவிலிருந்து கல்லீரலை செயற்கை முறையில் வளர்த்தெடுத்துஅதை அவருக்குப் பொருத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

thamilan thanks

No comments:

Post a Comment