இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதனை அரச குடும்பத்துடன் சேர்ந்து பொதுமக்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்தக் குழந்தை தான் இங்கிலாந்தின் புதிய அரசர் என்பதால் இக்குழந்தையை காண பொதுமக்கள் அரண்மனை மற்றும் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறிய வில்லியம்- கேட் தம்பதி இங்கிலாந்தின் புதிய ராஜாவை மக்களுக்கு காண்பித்தனர். இவர்கள் அரண்மனையைக்கு சென்றனர். அங்கு அவர்களை பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment