ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுவதற்கான பள்ளிவாசலில் நேற்று இரவு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
இதில் பள்ளிவாசலில் இருந்த தொப்பிகள், பாய்கள் மற்றும் அங்கு இருந்த மின்விசிறிகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் தொழுகை நடத்த சென்ற முஸ்லீம்கள் இதனை கண்டு அதிர்சியடைந்தனர். மர்ம நபர்களின் இந்த செயலை கண்டித்தும், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேணிக்கரை சந்திப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி. அமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி மயில்வாகணன் ஊடகத்தினரிடம் கூறுகையில், பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு காம்பவுண்ட் சுவர் உள்ளது. அத்துடன் இரவு நேர காவலாளியும் உள்ளார்.
இதனையும் மீறி இதுபோன்ற சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம் என்றும் மேலும் பள்ளிவாசலுக்கு தீ வைத்த மர்மநபர்களைப் கண்டுபிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
newindianews thanks |
No comments:
Post a Comment