உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றுவது என்பது, காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியாகும். அத்துடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இந்த திட்டத்தில் மிகவும் அக்கறை கொண்டு இருந்தார்.
67 சதவீத மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியம் வழங்க வகை செய்யும் இந்த சட்ட மசோதாவை கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தினால் பாராளுமன்றம் முடங்கியதால், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
அதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து இந்த அவசர சட்டம் அமலுக்கு வந்தது. இருப்பினும் அடுத்த 6 மாதத்திற்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இதற்கான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும்.
newindianews thanks
|
No comments:
Post a Comment