முதல் சூப்பர் ஜம்போ ஏ380 விமானம், ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியது
[ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013,
இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனது நீண்டதூர சேவைகளை நவீனப் படுத்துவதற்காக 10 பில்லியன் பவுண்டுகளை செலவழிக்கின்றது.
ஆறு புதிய போயிங் 777-300 ஈஆர் விமானங்களையும், பதினெட்டு ஏ-350 எர்பஸ்களையும் இந்நிறுவனம் ஏற்கனவே வாங்கியுள்ளது. மேலும், 12 சூப்பர் ஜம்போ வகையைச் சேர்ந்த ஏ-380 விமானங்களையும், 42 டிரீம்லைனர் விமானங்களையும் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இவை அடுத்த 10 வருடத்திற்குள் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும்.
சென்ற வாரம், முதல் இரண்டு போயிங் டிரீம்லைனர் விமானங்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. நேற்று காலை சூப்பர் ஜம்போ ஏ380 ரக முதல் விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தது.
பயணிகள் விமானத்தில் பெரியதான இதில் 469 பயணிகள் பயணம் செய்யலாம். பிரிட்டிஷ் ஏர்வேசின் நவீனப்படுத்தப்பட்ட முதல் வர்த்தக விமானம் வரும் செப்டெம்பரில் தனது சேவையைத் தொடங்க இருக்கின்றது.
கடந்த 2012ஆம் ஆண்டு, ஏ 380 விமானத்தில், இறக்கைகள் விமானத்துடன் பொருத்தப்படும் பகுதியில் உள்ள இணைப்பில் மெல்லிய விரிசல்கள் தோன்றியது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு விமானத்திலும் மொத்தம் 4,000 இணைப்புகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை மாற்றி சரி செய்வதற்கு ஏர்பஸ் நிறுவனம் 250 மில்லியன் யூரோக்களை செலவு செய்ய நேரிட்டது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஏ 380 விமானத்தை வாங்கியது. வர்ஜின் அட்லாண்டிக், வரும் 2018ஆம் ஆண்டிற்காக இதில் ஆறு விமானங்களைப் பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment