கனடாவின் டொரண்டோவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தந்தை ஒருவரை பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்தோடு கும்பலாக தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு டொரண்டோவின் Oakville என்ற இடத்தில் ஒரு காரின் உள்ளே ஒன்பது மாத குழந்தை ஒன்றை வைத்து பூட்டிவிட்டு ஷாப்பிங் செய்ய தந்தை உள்ளே சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் காரின் உள்ளே வெப்பம் தாங்காமல் குழந்தை பயங்கரமான வியர்வையுடன் அழுது கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வழியே சென்று கொண்டிருந்த பொதுமக்கள், உடனடியாக உள்ளே இருந்த தந்தைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென அந்த தந்தையை தாக்கத்தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, தந்தையையும்,குழந்தையையும் பத்திரமாக அனுப்பிவைத்தார். குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனே 911 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு கும்பலாக சேர்ந்து ஒருவரை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுரை கூறினர்.
டொரண்டோவில் ஒன்பது மாத குழந்தை ஒன்றை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்ற தந்தை ஒருவரை பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்தோடு கும்பலாக தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு டொரண்டோவின் Oakville என்ற இடத்தில் ஒரு காரின் உள்ளே ஒன்பது மாத குழந்தை ஒன்றை வைத்து பூட்டிவிட்டு, ஷாப்பிங் செய்ய தந்தை உள்ளே சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் காரின் உள்ளே வெப்பம் தாங்காமல் குழந்தை பயங்கரமான வியர்வையுடன் அழுது கொண்டிருந்தது. அதை பார்த்த அவ்வழியே சென்று கொண்டிருந்த பொதுமக்கள், உடனடியாக உள்ளே இருந்த தந்தைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
பின்னர் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென அந்த தந்தையை தாக்கத்தொடங்கினர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி, தந்தையையும்,குழந்தையையும் பத்திரமாக அனுப்பிவைத்தார். குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொதுமக்கள் உடனே 911 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டுமே தவிர இவ்வாறு கும்பலாக சேர்ந்து ஒருவரை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று பொதுமக்களுக்கு பொலிசார் அறிவுரை கூறினர்.
news thamilan. thanks
No comments:
Post a Comment