
இங்கிலாந்தில் இந்தியா உட்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விசா நடைமுறையில் கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கும் நிலையில், பிரான்ஸ் நாடு, இந்திய மாணவர்களுக்காக விசா நடைமுறைகளை தளர்த்தியுள்ளது. இங்கிலாந்து அரசு, இந்தியா, இலங்கை , பாகிஸ்தான் உட்பட 6 நாடுகளுக்கு விசா வழங்குவதில்...
பெரும் கெடுபிடியாக ரூபாய் 2.5 லட்சம் டெபாசிட் கட்ட வேண்டும், என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை உத்திரவாதம் அளிக்க முடியாது என்று மாணவர்களுக்கும் கெடுபிடிகளை விதித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்லும் மாணவர்களுக்கு விசா விதிமுறைகளைத் தளர்த்தி பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. இதற்கு இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் கெடுபிடியால், பிரான்ஸ் இது போன்ற விதிகளைத் தளர்த்தி, இந்திய மாணவர்களை தங்கள் நாட்டுக்கு இழுக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றும் கருத்து நிலவி வருகிறது. ஆனால் பிரான்ஸ் அதிபர் இது குறித்து கூறுகையில், "இங்கிலாந்து அரசு விசா விதிமுறைகளுக்கும், எங்கள் அரசு விசா விதிமுறைகளுக்கும் தொடர்பில்லை. அவரவர் அவரவர் நாட்டுக்கு உரிய விசா விதிமுறைகளை கடைபிடிக்கிறோம். இதில் போட்டி எதுவும் கிடையாது.
தற்போது அறிவித்துள்ள நடைமுறைப்படி இந்தியாவில் இருந்து இங்கு உயர்கல்வி பயில வரும் மாணவர்களுக்கு, பல்வேறு பயிற்சிக் கல்வி, உதவித் தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து தர திட்டமிட்டுள்ளோம்." என்று கூறியுள்ளார்.
News : Source
eutamilar thanks
No comments:
Post a Comment