நாட்டின் ரயில்வே துறை ஒவ்வொரு கட்டமாக தம்மை மாற்றிக் கொண்டு வருகிறது. நீண்ட வரிசையில் பல மணிநேரம் கால் கடுக்க நின்று டிக்கெட் எடுத்த காலம் மலையேறிவிட்டது.
தற்போது டிக்கெட்டும் போய் எம்.டிக்கெட் என ஜஸ்ட் மொபைல் மெசேஜ் போதும் என்றாகிவிட்டது. இப்படியான மாற்றத்தை தற்போது உணவு விடயத்திலும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது ரயில்வே நிர்வாகம்.
பொதுவாக ரயில்களில் இருக்கும் உணவு வகைகளைத் தான் சாப்பிட வேண்டியதிருக்கும். இதில் மாற்றத்தை கொண்டு வருகிறது ரயில்வே நிர்வாகம்.
உங்களுக்கு என்ன மாதிரியான உணவு வேண்டும் என்பதை ரயில்வேயின் இணையதளத்தில் தெரிவு செய்து உங்கள் பயண விபரங்களை பதிவு செய்துவிட்டால் போதுமாம்.
பிரியாணியோ பீசாவோ நீங்க உங்க சீட்டில் உட்காரும் போது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுமாம்.
உணவு உங்களிடம் வந்து சேர்ந்த பின்பு கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாமாம். இப்பொழுது டெல்லி- ஜம்மு, டெல்லி- அமிர்தசரஸ் சேவை மார்க்கங்களில் இந்த புதிய முறையை செயல்படுத்திப்பார்க்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறதாம்.
பின்னர் படிப்படியாக அனைத்து ரயில்களிலும் இது விரிவாக்கம் செய்யப்படுமாம். ராஜஸ்தானிகள், தூரந்தோ மற்றும் சதாப்தி ஆகியவற்றில் உணவுக்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்படுவதால் இவற்றில் இந்த திட்டம் செயல்படுத்தமாட்டோம் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
newindianews thanks |
No comments:
Post a Comment