அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 July 2013

அமெரிக்காவில் பாலியல் தொழிலில் சிறுமியரை ஈடுபடுத்தியவர்கள் கைது:

அமெரிக்காவில் பாலியல் தொழிலில் சிறுமியரை ஈடுபடுத்தியவர்கள் கைது:
July 30, 2013  10:40 am
சிறுவயதினர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும்வகையில் அமெரிக்க புலனாய்வுத்துறை சென்ற வார இறுதியில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.
 

சமூக ஊடக தளங்களில் இது போன்ற விபச்சாரங்கள் நடைபெறுவதும்நெடுந்தொலைவு பயணங்களில் டிரக்குகள் நிறுத்தப்படும் இடங்களில் நடைபெறும் இத்தகைய காரியங்களும் சோதனையாளர்களால் கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த மூன்று தினங்களாக 230 சட்ட அமலாக்கப்பிரிவினர் 76 நகரங்களில் நடத்திய இந்த சோதனைகளில், 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 105 இள வயதினர் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 13 முதல் 17வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். 

குழந்தை விபச்சாரம் அமெரிக்கா முழுவதும் உள்ள ஒரு தொடர் அச்சுறுத்தலாகும். இத்தகைய குற்றங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கான நினைவூட்டலாகவே புலனாய்வுத்துறையின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களினால் லாபமடைபவர்களைத் தடுத்து நிறுத்துவதிலும்இந்தத் தொடர் நிகழ்ச்சியினை முடிவுக்கு கொண்டு வருவதிலும் அமெரிக்க புலனாய்வுத்துறை உறுதியாக உள்ளது என்று இந்த அமைப்பின் துணை இயக்குனர் ரோன் ஹோஸ்கோ தெரிவித்தார். 

கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை 2700பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாராட்டுகள்,சலுகைகள் அல்லது பணம்பண்ண வேண்டும் என்ற எண்ணம் இளவயது பெண்களை இதில் சிக்க வைத்துவிடுகின்றது. இதனால்போதை மருந்துகள்சித்திரவதைஉடல் ரீதியான முறைகேடுகள் போன்றவற்றை பின்னர் அவர்கள் அனுபவிக்க நேரிடுகின்றது என்று ஹோஸ்கோ கூறியுள்ளார்.

 thamilan thanks

No comments:

Post a Comment