அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 July 2013

மதுவுக்கு எதிராக மதுரை மாணவி போராட்டம்: ஆதரவு பெருகுகிறது…

மதுவுக்கு எதிராக மதுரை மாணவி போராட்டம்: ஆதரவு பெருகுகிறது… 
பதிவு செய்த நாள் -
ஜூலை 30, 2013  at   7:17:02 AM
 
மிழ்நாட்டில் மது விலக்குக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவியின் போராட்டம் இரண்டாவது தொடர்கிறது. போராட்டத்திற்கு ஆதரவாக காந்தியவாதி சசிபெருமாளும் இன்று முதல் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்கிறார்.

மதுரை சட்டக்கல்லுரியில் படித்து வரும் நந்தினி என்ற மாணவி தமிழகத்தில் மதுபானக் கடைகளை உடனடியாக மூடக் கோரியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கல்லூரிக்கு வெளியே தொடங்கினார். இவரது போராட்டத்திற்கு மாணவர்கள், மது ஒழிப்பு இயக்கம் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இரவு மாணவி நந்தினியை மதுரை தல்லாக்குளம் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதையடுத்து மீ்ண்டும் கல்லூரி வாயிலில் போராட்டத்தை மாணவி நந்தினி தொடங்கினார். அவருக்கு ஆதரவு தெரிவித்த விஜயகுமார் என்ற மாணவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ள மாணவர்கள் இயக்கங்கள், கோரிக்கை ஏற்கபடாவிட்டால் அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.
காந்தியவாதி சசி பெருமாள் ஆதரவு
மதுவிலக்குக் கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நந்தினிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காந்தியவாதியும், மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவருமான சசிபெருமாள் இன்று மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க போவதாக தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு ஆதரவாக மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
மது ஒழிப்பு இயக்கம் ஆதரவு
இவரது போராட்டத்திற்கு மாணவர்கள், மது ஒழிப்பு இயக்கம் உள்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். மாணவி நந்தினிக்கு ஆதரவு தெரிவித்த விஜயகுமார் என்ற மாணவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவி நந்தினி தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ள மாணவர்கள் இயக்கங்கள், கோரிக்கை ஏற்கபடாவிட்டால் அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.
மாணவர் ஜோ பிரிட்டோ
மதுவால் தமிழகத்தில் தினம் தினம் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. மதுவை ஒழிக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒன்றிணைந்து பெரிய அளவில் போராடுவோம். மதுரையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவி நந்தினியையும் அவருக்கு ஆதரவு அளித்து வரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்களையும் நேரில் சந்திக்க இருக்கிறோம். மதுவை ஒழிக்கும் வரை மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று மாணவர் ஜோ பிரிட்டோ கூறியுள்ளார்.

news puthiyathalaimurai.tv thanks

No comments:

Post a Comment