அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 18 July 2013

இந்திய டிரைவர் மீது துபாய் ஆசாமி தாக்குதல்: வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது

இந்திய டிரைவர் மீது துபாய் ஆசாமி தாக்குதல்: வீடியோ எடுத்து வெளியிட்டவர் கைது
துபாய், ஜூலை 18- 

துபாயில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு சிறிய கார் விபத்து நடந்தது. அப்போது இந்திய டிரைவர் ஒருவரை துபாய் நாட்டுக்காரர் தாக்கியுள்ளார். இந்த காட்சியை வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்ட ஆசிய நாட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். 


ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்தவரின் பெருமையை குலைக்கும் செயலில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை வெளியிடவில்லை. இதுபற்றி துபாய் காவல்துறை தலைவர் கூறுகையில், “அனுமதியின்றி மற்றவர்களை படம் பிடித்து வெளியிட யாருக்கும் உரிமை இல்லை. 

சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீடியோ எடுத்த ஆசிய நாட்டவரை கைது செய்துள்ளோம்” என்றார். தாக்குதலில் காயமடைந்த இந்திய டிரைவர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. 

இருப்பினும் ஆன்லைன் மூலம் அந்த வீடியோவைப் பார்த்த அதிகாரிகள், தாக்குதல் நடத்திய துபாய் நாட்டவரை கைது செய்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

maalaimalar tnkas

No comments:

Post a Comment