அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 27 July 2013

ரேசன் கடைகளில் பாமாயில் தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

ரேசன் கடைகளில் பாமாயில் தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
ராமநாதபுரம், ஜூலை. 27–
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

“ஏழை எளிய மக்களின் அன்றாட உணவு பொருட்களை அரசு ரேசன் கடைகள் மூலம் விநியோகித்து வருகிறது. ரேசன் கடை பொருட்களை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக்கணக் கான ஏழைகள் இந்த மாவட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 12–ம் தேதிக்குள் மொத்த பண்டக சாலையிலிருந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய பாமாயில் இன்று தேதி வரை அனுப்பபடவில்லை. இதனால் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த மாதம் பாமாயில் வழங்கப்பட வில்லை என்று புகார் வந்துள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம் நகர், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் போன்ற பகுதிகளில் சமை யல் எண்ணெய் ரேசனில் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு சமையல் எண்ணெய் ரேசன் கடைகளில் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு கூறியுள்ளார்.

news maalaimalar thanks

No comments:

Post a Comment