பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தமிழக அரசு அறிவித்த ஆங்கில வழி தொடக்கக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா ஊராட்சி மன்ற தலைவர் முர்சுதீன் தலைமையில் முஸ்லிம்–இந்து சமூகத்தின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார். இதனை தொடர்ந்து தொடக்க கல்வி கூடுதல் அலுவலர் ஜோசப்ஆண்டோரெக்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய அலுவலர் குமரேசன், ஆசிரியை ஸ்ரீதேவி, ஊராட்சி துணை தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அன்புமலர் நன்றி கூறினார்.
dailythanthi thanks
No comments:
Post a Comment