ராமநாதபுரம்
ஈரான் நாட்டு சிறையில் பரிதவிக்கும் இந்திய மீன வர்களை விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று கலெக்டரை சந்தித்து மீனவர் சஙகத் தினர் மனு அளித்தனர்.
மீனவர்கள்
திருப்பாலைக்குடி காந்தி நகர் மீனவர் சங்க தலைவர் இளங்கோ தலைமையில் ஏரா ளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் கலெக்டர் நந்தகுமாரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது திருப்பாலைக்குடி மாரியம் மன் கோவில் தெருவை சேர்ந்த காளி கண்ணதாசன், மாயக்கிருஷ்ணன், மோர்ப் பண்ணை சாகிபு, திருப்பா லைக்குடி காளியப்பன், உமா செல்வம், முள்ளிமுனை மாய பாண்டி, ஆரோக்கிய சேசு, முத்து தருமையா, கடலாடி கிறிஸ்பின் ராஜா உள்பட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும், கன்னியாகும ரியை சேர்ந்த 8 பேரும், கட லூரை சேர்ந்த ஒருவரும், கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேரும் என மொத்தம் 24 பேர் துபாயில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் துபாய் சுபேல் அலி துறைமுக பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம் பர் மாதம் கடலுக்கு மீன்பி டிக்க சென்றனர். அப்போது எல்லைதாண்டி வந்து விட்ட தாக கூறி ஈரான் நாட்டு கடற் படையினர் 24 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் மூலம் அவர்கள் 24பேரையும் மீட்க கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.
நடவடிக்கை
இந்த நிலையில் 24 மீனவர் க ளுக்கும் தலா ஒரு லட் சத்து 80 ஆயிரம் ரியால் (இந் திய மதிப்பு ரூ.3½ லட்சம்) செலுத் தினால்தான் விடுதலை செய் யப்படுவார்கள் என்று ஈரான் அரசு தெரிவித்து விட்டது. இந்த தொகையை செலுத்தி துபாயில் உள்ள மீன்பிடி நிறு வனம் 24 மீனவர்களையும் விடுவிக்க நடவ டிக்கை எடுக்க வில்லை. எனவே இதுதொடர் பாக முதல்அமைச் சர் ஜெய லலிதா உரிய நடவ டிக்கை எடுத்து மத்திய அரசை வலி யுறுத்தி ஈரான் நாட்டு சிறை யில் உள்ள 24 மீனவர்களை விடுவிக்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
இந்த மனுவினை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது பற்றி தமிழக அரசின் கவனத் துக்கு கொண்டு சென்று நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
dailythanthi thanks
No comments:
Post a Comment