அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 1 August 2013

டெல்லியில் தினமும் சராசரி ஒன்பது அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்படுகின்றன!



Posted onThursday August 01, 2013
புதுடெல்லி: டெல்லியின் தெருக்களில் இருந்து தினமும் சராசரி ஒன்பது அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்படுகின்றன. தேசிய க்ரைம் ரிக்கார்ட் பீரோ அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இப்புள்ளிவிபரங்கள் அடங்கியுள்ளன
.

2012-ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 37,838 அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 3359 உடல்கள் டெல்லியில் மட்டும் கண்டெடுக்கப்பட்டன. முக்கியமாக தெருக்களில் வசிக்கும் நபர்களின் உடல்கள்தாம் கண்டெடுக்கப்பட்டன. பெரும்பாலானவர்களின் மரணம் இயற்கையானது. வாடகை கொடுக்க பணம் இல்லாததால் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளிகள் நகரங்களில் தெருக்களில் வசிக்கின்றனர். தாங்க முடியாத காலநிலை இத்தகைய தொழிலாளிகள், பிச்சை எடுப்பவர்களின் மரணங்களுக்கு காரணமாகின்றன.

தெருவில் வசிப்பவர்கள் மட்டுமின்றி போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் உடல்களும் தெருக்களில் இருந்து கண்டெடுக்கப்படுகின்றன. வீடில்லாதவர்களை பாதுகாக்க டெல்லிய்ல் ஷெல்டர் ஹோம்கள் உள்ளது என்றும், ஆனால் யாரும் அதனை பயன்படுத்துவதில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.டெல்லியில் கண்டெடுக்கப்படும் உடல்களில் பெரும்பாலானவை போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் உடல்கள் என்று டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் கூறுகிறார். க்ரைம் ரிக்கார்ட் பீரோ வெளியிட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு மஹராஷ்ட்ராவில் 5906 உடல்களும், தமிழ்நாட்டில் 5319 உடல்களும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 3996 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செய்தி: தேஜஸ்

popularfronttn thanks

No comments:

Post a Comment