அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 1 August 2013

தெலுங்கானா உருவாக்கம் பா.ஜ.கவுக்கு சாதகம்!- அஸாஸுத்தீன் உவைஸி!


Posted onThursday August 01, 2013
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கியது பா.ஜ.கவுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும், புதிய மாநிலம் முஸ்லிம்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின் (எம்.ஐ.எம்) தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அஸாஸுத்தீன் உவைஸி கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறியது: தெலுங்கானா உருவாக்கத்தின் மூலம் இப்பகுதியில் பா.ஜ.க மேலும் பலம் பெறும். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும். தெலுங்கு தேச கட்சி ஆந்திர கட்சியாக சுருங்கிவிடும். டி.ஆர்.எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி) உருவாக்கியதே தெலுங்கானா மாநிலம் உருவாக்கவேண்டும் என்ற ஒரே லட்சியத்தின் அடிப்படையிலாகும். புதிய மாநிலம் நிலுவையில் வரும்போது டி.ஆர்.எஸ் செல்வாக்கை இழக்கும். இந்த அரசியல் சூன்ய சூழல், பா.ஜ.கவுக்கு சாதகமாக மாறும்.

முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்க்கும் எல்லா வழக்குகளும் தெலுங்கானா பகுதியில் இருந்தே தொடரப்பட்டுள்ளது. இதுவே அப்பிரதேசத்தின் மனோநிலையை படம் பிடித்துக் காட்டும். எட்டு அல்லது ஒன்பது மாதங்களுக்கு முன்பு மஹ்பூப் நகரில் நடந்த இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ்ஸின் முஸ்லிம் வேட்பாளர் பா.ஜ.கவிடம் தோல்வியை தழுவினார். ஆனால், மஹ்பூப் நகர் டி.ஆர்.எஸ்ஸின் செல்வாக்கு மிக்க பகுதியாகும். தெலுங்கானாவின் மூலம் ஆதாயம் அடையப்போவது யார்? என்பதை அறிய இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? என்று உவைஸி கேள்வி எழுப்பினார்.

ஒரு அரசியல் கட்சி என்ற நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் உருவாக்கம் எம்.ஐ.எம்மிற்கு சாதகமாக இருந்தாலும், முஸ்லிம் சமுதாயத்திற்கு இழப்பாகும். இரு பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம்களின் நலன்களை பரிசீலித்தால் ஆந்திரபிரதேச மாநிலத்தை பிரிக்காமலிருப்பதே சிறந்தது என்று உவைஸி தெரிவித்துள்ளார்.

செய்தி: தேஜஸ்

popularfronttn thanks

No comments:

Post a Comment