அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 10 October 2014

தொழிலதிபர்களுடன் மோடி ரகசிய பேரம்; மருந்துகளின் விலை கடுமையாக உயரும்: ராகுல் தாக்கு!



 (11/10/2014))











தின்தோரி: பிரதமர் மோடி தொழிலதிபர்களுடன் மேற்கொண்டுள்ள ரகசிய பேரத்தால், மருந்துகளின் விலை கடுமையாக உயரும் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.




மகாராஷ்டிர மாநிலம் தின்தோரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது, ''அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திமோடி சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னதாக அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குழுவினர் மோடியைச் சந்தித்து மருந்துகளின் விலைக்கான கட்டுப்பாட்டை நீக்க கேட்டுக்கொண்டனர். திரைமறைவில் நடைபெற்ற இந்த பேரத்தால், 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து தற்போது ரூ.1 லட்சமாக உயரப் போகிறது.

மேலும், மத்திய அரசின் கொள்கையால் நீரிழிவு, ரத்தக்கொதிப்புக்கான மருந்து விலைகளும் பன்மடங்கு உயரும். இந்த விலை உயர்வால் மக்களின் பணம் நேரடியாக தொழிலதிபர்களின் பைகளில் சென்று சேரப்போகிறது. முன்னதாக நேரடி மானியத் திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தை தற்போது பெயர் மாற்றம் செய்து பா.ஜ.க.வினர் தொடர்ந்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவை பலம் வாய்ந்த நாடாக மாற்றப் போவதாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப் போவதாகவும் மோடி கூறினார். எல்லையில் பாகிஸ்தான் தற்போது நடத்தி வரும் தாக்குதல்களால் நமது வீரர்களும், குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். ஆனால் தற்போது எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி கூறுகிறார். எப்போது சரியாகும்? என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

news.vikatan thanks

No comments:

Post a Comment