ராமநாதபுரம், அக். 1
ராமேஸ்வரம் அருகில் உள்ள திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன் ராஜபாண்டி (வயது 35), வேன் டிரைவர். நேற்று ராஜபாண்டி ராமேசுவரத்துக்கு வேனை ஓட்டி வந்தார்.
மண்டபம் பகுதியில் உள்ள ராமேசுவரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சுற்றுலா வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜபாண்டியின் கால்கள் தூண்டானது.
அங்கிருந்தவர்கள் அவரை கஷ்டப்பட்டு மீட்டு ராமநாதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
maalaimalar thanks

No comments:
Post a Comment