அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 27 November 2014

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு கோழி இறைச்சி லாரிகள் வரத் தடை: தமிழக அரசு


கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கேரளாவிலிருந்து கோழி

மற்றும் இறைச்சிகள் லாரி வரத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
கேரளாவில் கோட்டயம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் மிக வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அங்குள்ள கோழிப் பண்ணைகள் மற்றும் வாத்துப் பண்ணைகளில் உள்ள பறவைகளை அழிக்க கேரள அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இந்த பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க, கேரளாவிலிருந்து கோழி மற்றும் கோழி இறைச்சிகள், முட்டைகள், மீன் என்று எதையும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கேரள,தமிழக எல்லைகளில் கேரளாவிலிருந்து வரும் லாரிகள் சோதனைக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப் படுகின்றன.
கேரளாவில் உள்ள பண்ணைகளில் சுமார் 3 லட்சம் கோழி, வாத்து, புறா என்று பறவையினங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பண்ணை
உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு
தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



.4tamilmedia thanks

No comments:

Post a Comment