அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 9 December 2014

மராட்டிய மாநில கிராமத்தில் நைட்டி அணிந்து பெண்கள் வெளியே நடமாடினால் ரூ 500 அபராதம்


மும்பை

மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகேயுள்ளது கோதிவளி என்ற கிராமம். இது நவி மும்பை மாந்கராட்சிக்கு உடபட்டதாகும். இந்த கிராமத்தில் செயல்படும் 'இந்திரயானி மகிளா மண்டல்' என்ற பெண்கள் அமைப்பு தனது ஆபீசுக்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிட்ட அறிவிப்பு கிராமத்திலுள்ள பெண்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது இதுதான்: கோதிவளி கிராமத்தை சேர்ந்த எந்த பெண்களாவது தங்களது வீட்டுக்கு வெளியேயோ அல்லது ரோட்டிலோ நைட்டி அணிந்தபடி தென்பட்டால் அவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பெண்கள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் லட்சுமி பாட்டீல்  கூறுகையில் 

"பெண்களுக்கு எதிராக ஆண்களின் பாலியல் உணர்வு தூண்டப்பட ஆடைகள் முக்கிய காரணம். முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் சேலை அணிவார்கள். இப்போது நைட்டி கலாச்சாரம் காட்டு தீ போல பரவி, பெண்கள் அனைவரும் நைட்டியோடு கடைகளுக்கு சாமான்கள் வாங்க வருகிறார்கள். எனவேதான் பெண்களின் மாண்பை காப்பாற்ற இதுபோன்ற அபராத முடிவுக்கு வந்துள்ளோம்" என்றார்.

 ஆனால் இந்த அபராத விதிப்புக்கு பெண்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையம் சென்றனர். போலீசார் தலையிட்டு பெண்கள் அமைப்புடன் பேசி, அறிவிப்பு பலகையை அகற்றியுள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கோஜ்ரே கூறுகையில், ஆடை விஷயத்தில் அபராதம் விதிக்க கிராம பஞ்சாயத்து, பெண்கள் அமைப்புகளுக்கு உரிமை கிடையாது" என்றார்.



news dailythanthi thanks

No comments:

Post a Comment