அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 2 May 2015

உடல் பருமனாவதையும் தொப்பை வைப்பதையும் தவிர்க்க உதவும் 7 உணவுகள்!


1. பழங்களும் மரக்கறிகளும் :

நமக்குப் பரவலாகக் கிடைக்கும் கீரைவகை, புரோக்கோலி, காளான்கள், ஸ்பினாச்சி உட்பட மரக்கறிகளும் ஆப்பிள்கள், பெர்ரீஸ், பப்பாசி, அன்னாசிப் பழம் உட்பட பழவகைகளும் எமது உடலில் கொழுப்பைக் கரைக்க முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2. மூலிகைத் தேநீர் (Green tea) :

இவ்வகைத் தேநீரில் இயற்கையாகவே கொழுப்பைக் கரைக்கும் மூலக் கூறுகள் காணப் படுவதாகவும் மூலிகைத் தேநீரிலுள்ள EGCG இன் அளவானது உடல் கொழுப்பைக் கரைக்க உதவுவது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

3. வறுக்கப் பட்ட கடலை வகைகள் (Monounsaturated fats) :

இதயத்துக்குப் பாதுகாப்பான அளவு கொழுப்பை மாத்திரமே கொண்டுள்ள இந்த உணவு வகைகள் உடல் முழுதும் கொலஸ்ட்ரோல் அளவைக் கட்டுப் படுத்துவதற்கும் உதவுகின்றன. மிகச் சிறந்தவையாக ஆலிவ் ஆயில், ஆல்மொண்ட்ஸ் மற்றும் வெண்ணெய்ப் பழம் ஆகியவை பரிந்துரைக்கப் படுகின்றன.

4. ஒமேகா-3 வகை கொழுப்பு அமிலங்கள்:

ஆய்வுகள் மூலம் ஒமேகா-3 வகை கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுப் பொருட்கள் உடல் பருமனாவதைத் தடுக்க உதவுவதும் அறியப் பட்டுள்ளது. இவ்வகையான உணவுகளாக வோல்நட்ஸ் (Walnuts), ஆளிவிதை (Flaxseed), மீன் மற்றும் வனங்களின் ஆற்றிலுள்ள நன்னீர் மீன் (salmon) என்பவை பரிந்துரைக்கப் பட்டுள்ளன.

5. மசாலாப் பொருட்கள் (Spices) :

வெள்ளைப்பூடு, மஞ்சல், கருவாப் பட்டை, இஞ்சி, மிளகாய்த் தூள் மற்றும் மிளகு ஆகிய மசாலாப் பொருட்கள் கூட உடல் கொழுப்பைக் கரைக்க உதவுவதாகக் கூறப்படுகின்றது.

6. தண்ணீர் :

ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 64 அவுன்ஸ் தண்ணீர் அருந்துவது எமது உடலில் இருந்து கொழுப்பை உண்டு பண்ணும் டாக்ஸின்கள் வெளியேற உதவுவதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.

7. முழு தானியங்கள் :

அதிகளவு ஃபைபர் சத்தைக் கொண்ட இவ்வகை உணவுகள் எமது உடலில் கொழுப்புக்குக் காரணமான இன்சுலினைக் கட்டுப் படுத்த உதவுவதாகவும் இவற்றில் மிக அதிகளவு விட்டமின் B இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

news 4tamilmedia thanks

No comments:

Post a Comment