அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 6 October 2015

சட்டப்பூர்வமாக நாங்கள்தான் மனித நேய மக்கள் கட்சி: தமிமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி

சட்டப்பூர்வமாக நாங்கள்தான் மனித நேய மக்கள் கட்சி: தமிமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி
சென்னை, அக். 6- 

தாம்பரத்தில் இன்று மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால், மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்ததால், சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

ஆனால், சென்னை தாம்பரத்தில் கட்சித் தலைவர் ரீபாயீ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தமிமுன் அன்சாரியை பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஆருண் ரஷீத்தும் நீக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இவர்கள் இருவரும் மனித நேய மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய தமிமுன் அன்சாரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தாம்பரத்தில் பேராசிரியர் ஜவாகிருல்லா கூட்டியது உண்மையான பொதுக்குழு கூட்டம் அல்ல. எங்களை நீக்கியது சட்டவிரோதம். நாங்கள்தான் சட்டப்பூர்வ மனிதநேய மக்கள் கட்சி. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எங்கள் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்போம். 

ஜவாகிருல்லா கட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் அல்லும் பகலும் கடுமையாக உழைத்தன் விளைவாக அவர் இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் பற்றி என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்களாக கேட்டால் மட்டுமே சொல்வார்.  

இவ்வாறு அவர் கூறினார்.


news maalaimalar thanks

No comments:

Post a Comment