அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 6 October 2015

நாங்கள்தான் உண்மையான ம.ம.க - தமீம் அன்சாரி அதிரடி!

நாங்கள்தான் உண்மையான ம.ம.க -  தமீம் அன்சாரி அதிரடி!
சென்னை (06.அக்.2015): "நாங்கள்தான் உண்மையான ம.ம.க" என்று பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட தமீம் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளாராக இருந்து வந்த தமீம் அன்சாரிக்கும் கட்சிக்குமிடையே ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக இன்று கூடிய தாம்பரம் மாநில பொதுக்குழு தமீம் அன்சாரியையும், ஹாரூனையும் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் கட்சித் தலைவராக ம.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவும், அப்துல் சமது மாநில பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று மாலை சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமீம் அன்சாரி, "நாங்கள்தான் உண்மையான ம.ம.க, எங்கள் நீக்கத்தை சட்டப்படி சந்திப்போம்" என்றும், "விரைவில் இதுகுறித்து எங்கள் முடிவை அறிவிப்போம்" என்றும் தெரிவித்தார்.

மேலும் ம.ம.கவின் பிளவுக்கு, திமுகவோ, அதிமுகவோ, வேறு எந்த கட்சியுமோ காரணமில்லை என்றும் எங்கள் கட்சிக்குள் கடந்த ஏழு எட்டு வருடங்களாகவே உட்குழப்பம் ஏற்பட்டு கட்சிக்காக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றும் தமீம் அன்சாரி தெரிவித்தார்.

மேலும் "திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் சமாதான முயற்சியில் ஈடுபட்டார்கள். எனினும் கட்சித் தலைமை அவர்களின் முயற்சியை ஏற்றுக் கொள்ளவில்லை" என்றும் தமீம் அன்சாரி தெரிவித்தார்.

முன்னதாக நேற்று போட்டி பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்த தமீம் அன்சாரி, பலரின் சமரச முயற்சிகளுக்குச் செவிசாய்த்து இன்று காலை அந்தப் பொதுக்குழுவை ரத்து செய்வதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துவேறுபாடுகள் இருப்பினும் சமரச முயற்சிகளுக்குச் செவிசாய்த்து கட்சி பிளவுபடுவதைத் தவிர்க்கத் தாம் தயாராக இருப்பதை வெளிப்படுத்தி சமரசத்துக்கு முன்வந்த தமீம் அன்சாரியைப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற பெயரில் ஓரங்கட்டிய செயல் அநியாயமானது என்ற கருத்து ம.ம.க தொண்டர்களிடையே எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


news inneram thanks

No comments:

Post a Comment