பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Wednesday, 28 July 2021
28/07/2021அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)உள்ளூர் மரண அறிவிப்புஅறிவிப்பு நமதூர் ஜமாத்தைச் சேர்ந்த ரஹ்மத் அலி அவர்களின் மகள்வழி பேரனும்,அப்ரித் அவர்களின் சகோதரனுமாகிய முஹம்மது சுஹைல் என்பவர் இன்று மாலை மரணம் அடைந்துவிட்டார்கள்....இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....இன்ஷா அல்லாஹ் அண்ணாரின் ஜனாஸா நாளை நமதூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்....
*அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு...*அல்லாஹ்வின் கிருபையால் நமதூர் புதுவலசை *KMCC* கிரிக்கெட் அணியை பாரட்டும் வகையிலும், நமது அணி வீரர்கள் சிறப்பாக விளையாட ஊக்குவிக்கும் வகையிலும், நமதூர் புதுவலசையை சேர்ந்த மதிப்பிற்குரிய *காசியார் வீட்டு முஹம்மது இபுனி அவர்களின் மகன் ஷபியுல்லா ( மலாக்கா மலேசியா )* அவர்களின் சார்பாக புதுவலசை *KMCC* கிரிக்கெட் அணிக்கு 25 சீருடைகள் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது... *அல்ஹம்துலில்லாஹ்...**அல்ஹம்துலில்லாஹ்...**அல்ஹம்துலில்லாஹ்...*நமதூரை சேர்ந்த *காசியார் வீட்டு முஹம்மது இபுனி அவர்களின் மகன் ஷபியுல்லா ( மலாக்கா மலேசியா )* அவர்களுக்கு புதுவலசை *KMCC* கிரிக்கெட் அணியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்... இன்ஷா அல்லாஹ் அவர்கள் மேன்மேலும் பல நற்காரியங்கள் செய்வதற்கு அல்லாஹ் அருள்புறிவானாக என்று புதுவலசை *KMCC* கிரிக்கெட் அணியின் சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம்...இப்படிக்கு...*KMCC நண்பர்கள் குழு.**புதுவலசை.*
Monday, 19 July 2021
அனைவருக்கும் தியாகத்திரு நாள் நல்வாழ்த்துக்கள்!!!அன்புடன் sahab appakutty
படைத்த ரப்புல் ஆலமீனின் மேல் கொண்ட பாசத்தால் இறை கட்டளை அனைத்தையும் செயல்படுத்த ஒரு குடும்பம் செய்த தியாகத்திற்காக ரப்புல் ஆலமீன் கொடுத்த பெரும் பரிசு தான் தியாகத் திருநாள்.
இப்ராஹீம் (அலை), அவரது மனைவி ஹாஜிரா (அலை), மகன் இஸ்மாயில் (அலை) ஆகியோரது “செயல்கள்” தான் இன்று ஒட்டு மொத்த மனித சமூகமும் ஹஜ்ஜை நிறைவேற்ற செய்யும் “அமல்களாக” ரப்புல் ஆலமீன் கடமையாக்கிவிட்டான்.
நெருப்பில் பொசுக்குவதற்காக நம்ரூத்தும் அவனது பரிவாரங்களும் நெருப்பை பல நாள்களாக எரித்து கொடும் நெருப்பாக மாற்ற நினைத்தது, இப்ராஹீம் (அலை) கட்டி வைத்து கண் முன் ஒவ்வொரு நாளும் நெருப்பின் கோரத்தை காண செய்தது, இப்ராஹீமை உள்ளத்தால் பலவீனமடைய வைத்து அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். அவர்கள் நினைத்திருந்தால் ஒரே நாளில் நெருப்பில் போட்டு பொசுக்கி இருக்கலாம். ஆனால் அவர்களது நோக்கம் இப்ராஹீமை பயமுறுத்தி படிய வைத்திட வேண்டும் என்பதே.
உண்மை விசுவாசிகள், ஒரு போதும் அச்சப்பட மாட்டார்கள் என்பதை அன்றைய நம்ரூத்தும், இன்றைய அவனது கூட்டாளிகளும் அறியாமலேயே இருக்கின்றார்கள். "ஹஸ்புனல்லாஹ் வ நிஃமல் வகீல்" என்ற உறுதியான வார்த்தை மட்டுமே உண்மை விசுவாசிகளின் பதில்.
ஹாஜிரா அம்மையார் ஓடிய சஃபா, மர்வா எனும் தொங்கு ஓட்டமும், இப்ராஹீம் (அலை) சைத்தானை கல்லால் எரிந்து துரத்தியதும், இறைவனின் ஆணைக்கினங்க இஸ்மாயில் (அலை) காலடியில் இருந்து பீரிட்டு வந்த ஜம் ஜம் தண்ணீரும், கழுத்தை அறுக்க கத்தியை உயர்த்திய இப்ராஹீம் (அலை)-க்கு ஆட்டை அறுத்து பலியிட ஆணையிட்ட கருணைக்கும் பின்னால் பெரும் படிப்பினைகளும், நடைமுறை படுத்த வேண்டிய செயல்முறைகளும் நமக்கு ஏராளம் உண்டு.
இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் ....
சைத்தானுக்கும், சைத்தானின் கூட்டாளிகளுக்கும் அடிபனிந்து கோழைகளாக மண்ணுக்கு மேல் வாழ்வதை விட; இறை பொருத்ததிற்காக, தியாகத்தின் மூலம் ஈமானை மெய்ப்படுத்துவதால் வரும் இழப்புகளை ஏற்று கொண்டு பூமிக்கு கீழ் வாழ்வது தான் சிறந்த வாழ்வு.
தகப்பலல்லாஹு
மின்னா வ மின்கும்!
அல்லாஹ் நம் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், நற்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, இம்மையிலும் மறுமையிலும் நமக்கு வெற்றியை வழங்கிடுவானாக!
இந்த தியாகத் திருநாள் உங்கள் உள்ளத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியைத் தரட்டும்!
அல்லாஹ்வின் அளவிலா அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றும் எப்போதும் கிடைக்கட்டும்!
அனைவருக்கும் தியாகத்திரு நாள் நல்வாழ்த்துக்கள்!!!
அன்புடன்
வலசை பைசல்
Sunday, 18 July 2021
Saturday, 10 July 2021
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுவலசை ஊராட்சியில் உள்ள அரபி ஒலியுல்லா விளையாட்டு மைதானத்தில் பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத அந்த கிணறு பள்ளிக் குழந்தைகள் விளையாடுவதற்கு இடையூராகவும் ஆபத்தான நிலையிலும் இருந்ததாலும் துர்நாற்றங்கள் நிறைந்து காணப்பட்ட கிணறு கால்நடைகள் விழும் அபாயகரமான சூழ்நிலையிலும்இருந்தது.. எனவே அந்த கிணறு அகற்றப்பட்டது... அந்த இடம் பள்ளி பிள்ளைகள் பயன்பாட்டுக்கு சரி செய்யப்பட்டது....என்றும் மக்கள் பணியில்.. v.மீரான் ஒலி ஊராட்சி மன்ற தலைவர் புதுவலசை
நேற்று மாலை இராமநாதபுரத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்களிடம் நமதூர் சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துதல் மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணியை துரிதப்படுத்துதல் சம்பந்தமாக புதுவலசை ஜமாத் சார்பில் நேரில் மனு கொடுக்கப்பட்டது.👇👇
Subscribe to:
Posts (Atom)