அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 25 October 2023

புதுவலசை ஜமாத் தங்களின் கடமையை உணர்ந்து ஊர் பொதுமக்களையும், மக்களின் உடமைகளையும் பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக நமது ஊருக்குள் நடந்து கொண்டிருக்கும் சிறு சிறு திருட்டுகளை, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் போனால் பெரிய திருட்டுக்கு வழிவகை செய்யும் மற்றும் பெரும் ஆபத்துகளையும் விலைவிக்கக் கூடியதாக இருக்கும்.

நமது ஊருக்குள் தொடர்ச்சியாக நடைபெற்ற திருட்டுக்கள்:

சேகு அமானுதீன் சார் வீட்டில் 20 ஜோடி புறாக்கள், 
பாம்பாட்டி அவர்களது தோப்பில் இஞ்சின் மோட்டார், 
சகோதரர் பாஷில் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் திருட மேற்கொண்டு முடியாததால் இரும்பு பொருட்களை திருடி சென்றது. 

சகோதரர் சிக்கந்தர் ஷா  தோப்பில் மோட்டர் திருடியது, சகோதரர் அபுரார் அவர்கள் தோப்பில் மோட்டர் திருடியது மற்றும் தற்போதைய சைக்கிள் திருட்டு என தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. 

இது நமக்கு தெரிந்த திருட்டுக்கள். வெளியில் தெரியாமல் எத்தனை திருட்டுக்களோ?

நமதூரில் முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஏதேனும் அசம்பாவிதமோ?, திருட்டோ அல்லது திருடன் நடமாட்டமோ இருந்தால் உடனடியாக ஜமாஅத் மற்றும் சங்கம் தலையிட்டு அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும். 

ஆனால் கடந்த சில மாதங்களாக, விரும்பத்தகாத சில விசயங்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டோ அல்லது எதார்த்தமாகவா என்று தெரியவில்லை ஆனால் நடைபெறுகின்றது. 

ஜமாஅத்தும், நிர்வாகிகளும் நமக்கேன் வம்பு என்று வேடிக்கை பார்ப்பது போல் உணர்கின்றோம். இது ஊருக்கும், ஊரின் பாதுகாப்பிற்கும், ஊரில் மக்களுக்கும் நல்லதல்ல. 

திருமணத்திற்கு செல்வது, கொடியேற்றுவது, விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என ஜமாஅத் செயல்பாடுகள் குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி, ஜமாஅத்தின் கடமைகளை செய்வதிலிருந்து தூரமாகிவிட்டதோ? என்று எண்ண தோன்றுகிறது. 

இந்த நிலை தொடர்வது ஊருக்கும், ஊரின் வளர்சிக்கும் நல்லதல்ல. 

கூடுதலாக பொது தளத்தில் எழுதுவது உகந்ததல்ல என்பதால், இதை சுருக்கமாக  குறிப்பிடுகின்றேன். இந்த நிலை உணர்ந்து ஜமாஅத்தும், சங்கமும் செய்லபட வேண்டியது காலத்தின் கட்டாயம். 

களத்திற்கு வரமுடியாது, காவல் நிலையம் செல்ல அச்சமாக இருக்கின்றது, ஊரில் இருக்கும் பொது சொத்தை அந்நியர்கள் ஆட்டையை போட முற்படும் போது அமைதியாக கடந்து போய்விடலாம், நமக்கேன் வம்பு என்று நினைப்பவர்கள் நிர்வாகத்தில் இருந்தால் அது தான் ஊரின் சாபகேடு. 

ஊரின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை. இருந்து கொண்டு தயவு செய்து உபத்திரம் செய்யாதீர்கள். 

நம்மை சுற்றிலும் நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி கொண்டு செயல்படும், தைரியமிக்க அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி நடக்க கூடிய நிர்வாகத்தை தான் நாம் எதிர்பார்க்கின்றோம். 

எது நடந்தாலும் தனி நபர் பார்த்து கொள்வார் என்றால் ஜமாஅத் நடவடிக்கைகள் கேள்வி குறியாகிவிடும். 

புதுவலசை ஜமாத் தங்களின் கடமையை உணர்ந்து ஊர் பொதுமக்களையும், மக்களின் உடமைகளையும் பாதுகாக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக எந்த உதவிகள் வேண்டுமாலும் என்னை போல் பலரும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். 

ஊரின் பாதுகாப்பும், வளர்ச்சியும் மிக மிக அவசியம். ஒரு சிலரின் அலட்சிய போக்கால் அதை இழந்து விட்டு நிற்க தயாரில்லை என்பதை இதன் மூலம் தெரியபடுத்தி கொள்கின்றேன். 

அன்புடனும், உரிமையுடனும் கூறி கொள்கின்றேன். 

இப்படிக்கு 
பைசல்

இதே போன்று ஊருக்குள் கஞ்சாவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாகவும் தகவல் வருகின்றது. மிக ஆபத்தான அனைத்து பாவங்களுக்கும் வழிவகுக்கும் கஞ்சாவை ஊருக்குள் கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் கடும் எதிர்ப்பை காட்ட வேண்டும், தகுந்த நடவடிக்கையின் மூல அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பல அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடும். மிகவும் எச்சரிக்கையாகவும், தைரியமாகவும் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். கைமீறி சென்றதன் பின் கட்டுபடுத்த முடியாமல் கைபிசைந்து நிற்பது நமக்கும், ஊருக்கும் பேரிழப்பாகும். 

இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து ஊருக்குள் வந்து பல வீடுகளுக்கு பால் விற்பனை செய்கிறார்கள். இரவு 8 மணிக்கு மேல் ஊரின் தெருக்களில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளின் சர்வ சாதாரணமாக யாரோ ஒருவன் ஊர் முழுவதும் சென்று வருகின்றான் சில நேரங்களில் 20-25 வயது இளைஞர்கள் பால் ஊற்றுகின்றேன் என்று வந்து போகிறார்கள். இவை கண்கானிக்கப்பட வேண்டும். 6 மணிக்கு மேல் ஊருக்குள் உனக்கு என்ன வேலை என்ற கேள்வியுடன் வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு நமதூரில் இருந்த கட்டுப்பாடுகள் இன்று இல்லாமல் போனதன் காரணம் தெரியவில்லை. 

ஆனால் மீண்டும் அந்த கட்டுபாடுகளுக்கு உயிர் கொடுக்கப்பட வேண்டும். இன்னும் ஏராளமான நிகழ்வுகள். அவை நம் போன்றவர்களின் முயற்சிகளால் சரி செய்யப்பட வேண்டும். 

நமக்கேன் வம்பு எங்கோ தானே எரிகிறது என்று கடந்து சென்றால் ஒரு நாள் அந்த நெருப்பு நம்மையும், நம் சார்ந்தவர்களையும் பொசுக்கி விடும். 

சிலருக்கு நான் வேலை இல்லாமல் எழுதுகின்றேன் என்று தோன்றலாம். சிலருக்கு விளையாட்டாக இருக்கலாம். சிலர் காலம் முழுவதும் வேடிக்கை பார்பவர்களாக மட்டும் இருக்கலாம். 

*ஆனால் மிக சிலருக்கு என் எழுத்தின் ஆழமும், கருத்தின் தாக்கமும் புரியும். அந்த வெகு சிலர் இந்த கருத்துகளை உள்வாங்கி செயல்பட்டார்கள், செய்ல்படுகிறார்கள், செயல்படுவார்கள்*

அமைதியான முறையில் இது போன்ற விரும்பதகாத செயல்வாடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதே நமது எண்ணம்.

புரிபவர்களுக்கு புரியும்…

பார்வையாளர்களாக மட்டுமே படித்து விட்டு கடந்து போகாமல், நம்மால் ஆன நல்லதை ஊருக்காக செய்ய முற்படுவோம்.

நாம் முன் பின்பற்றிய ஊர் கட்டுப்பாடு வழிமுறையை   இன்று பிரசமூகம் பின் பற்றிகிறது முன்னேறுகிறது. நாம் அதை விட்டதன் வெளிப்பாடு சமூக சீர்கேடு நோக்கி பயணிக்கின்றது. ஊர் கட்டுப்பாடு மூலம் வளமான சமூகத்தை கட்ட அமைப்பது காலத்தின் கட்டாயம்

No comments:

Post a Comment