*கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் பொது நிர்வாகம் பொது மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம் அரசாணை எண் 167*
கிராம ஊராட்சி கூட்டங்கள்
கிராம ஊராட்சி அதன் அலுவல்களைச் செவ்வனே நடத்துவதற்கு கூட்டங்கள் நடத்துவது மிகவும் அவசியம். கூட்டங்கள் ஊராட்சி அலுவலகத்தில் கூட்டப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இரண்டு கூட்டங்களுக்கிடையேயான கால இடைவெளி 60 நாட்களுக்கு மேற்படக்கூடாது. விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்தக்கூடாது. ஒவ்வொரு வகையான கூட்டமும் ஒவ்வொரு தன்மையுடன்கூடியதாகும்.
ஊராட்சிக் கூட்டங்களின் வகைகள்
1. சாதாரணக் கூட்டம்
2. சிறப்புக் கூட்டம்
3. அவசரக் கூட்டம்
4. வேண்டுகோள் கூட்டம்
1. சாதாரணக் கூட்டம் நடத்தப்படும் முறை
1. குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும்.
2. கூட்ட அறிவிப்பு கூட்ட நாளிற்கு குறைந்தது 3 முழு நாட்களுக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டும்.
3. அறிவிப்பில் கூட்டம் நடைபெறும் இடம், தேதி, நேரம், விவாதப் பொருள்கள் இடம் பெற வேண்டும்.
4. சாதாரண கூட்டத்தில் எந்தப்பொருளையும் சேர்க்கலாம்.
5. கூட்டப்பொருள் தலைவரால் தயாரிக்கப்படவேண்டும்.
6. கூட்டப்பொருள் உறுப்பினர்களாலும் முன்மொழியப்படலாம். (கூட்டம் நடைபெறும் நாளுக்கு 7 நாட்களுக்கு முன்பு கிராம ஊராட்சித் தலைவருக்கு விவரம் தரவேண்டும்).
7. வருகைப்பதிவேடு கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
கூட்டத்தில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய பொருட்கள்
1. மாதாந்திர வரவு செலவு அறிக்கையும், அனைத்து கணக்குகளும்
2. அந்த மாதம் வரை நடைபெற்ற திட்டப்பணிகளின் முன்னேற்ற அறிக்கை
3. ஊராட்சியில் நடைபெறும் பணிகளைப் பார்த்து ஆய்வு செய்த அலுவலரின் ஆய்வு அறிக்கை
4. மாநில, மைய அரசு, மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு அறிக்கைகள், வழிகாட்டிகள் மற்றும் நடைமுறைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். செல்வம்.
5. குறிப்பிட்ட கால வரையறைக்குள் சேர்க்கப்பட வேண்டிய கூட்டப்பொருட்கள்
நிதியாண்டு முடிந்ததும் நிர்வாக அறிக்கை ஆண்டு வரவு, செலவு அறிக்கை தணிக்கை அறிக்கை கிராம வளர்ச்சித் திட்டம்
6. தேவையான பிற தீர்மானங்கள்.
கூட்டத்திற்கான அறிவிப்பு மற்றும் பொருட்கள் சார்வு செய்தல்
1. கூட்ட அறிவிப்பையும் நிகழ்ச்சி நிரலையும் முடிந்தவரை உறுப்பினர்களிடம் நேரில் கொடுத்துத் தேதியுடன் கையொப்பம் பெற வேண்டும்.
2. நேரில் சார்வு செய்ய இயலாதபொழுது உறுப்பினரின் குடும்பத்திலுள்ள வயது வந்த நபரிடம் கொடுக்கலாம்.
3. மேற்கூறிய இரு முறைகளிலும் முடியாமல் போனால் ஒப்புகை பெற்ற பதிவஞ்சலில் உரிய நாட்களுக்கு முன்னதாக உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்படி கூட்ட அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும் அனுப்பப்பட வேண்டும்.
4. மேற்படி தபால் சேர்ப்பிக்கப்பட இயலவில்லை அஞ்சலகத்திலிருந்து திரும்பப் பெறப்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நபரின் கடைசி முகவரியில் ஒட்டி சார்வு செய்யப்பட வேண்டும்.
5. உறுப்பினர் யாருக்கேனும் கூட்ட அறிவிப்பு உரிய காலத்திற்கு முன்பு சார்வு செய்யாமல் கூட்டம் நடத்தினால், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாதவையாகிவிடும்.
2. சிறப்புக் கூட்டம்
1. சிறப்புக் கூட்டம் என்பது ஒரே ஒரு பொருள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாகும்.
2. சிறப்புக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று அரசால் அறிவிக்கப்பட்ட இனங்களில் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் நடத்த வேண்டும்.
3. அரசால் காலம் குறிப்பிடப்படாத இனங்களில் பொதுவாக 3 முழு நாட்களுக்குக் குறையாத கால அவகாசத்தில் நடத்தலாம்.
4. தலைவர்/உறுப்பினர் பதவி ஏற்றல், துணைத்தலைவர் தேர்தல் பதவி ஏற்றல், வரிவீதம் உயர்த்துதல்/திருத்தியமைத்தல், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 3 மாதத்திற்குள் நீக்கல் (அல்லது) திருத்துதல், நம்பிக்கையில்லா தீர்மானம், தலைவர்/ துணைத்தலைவர்/ உறுப்பினர்கள் பதவி விலகல், தலைவர்/ துணைத்தலைவர்/உறுப்பினர்கள் பதவி நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக சிறப்புக்கூட்டம் கூட்டலாம். கூட்டம்
https://www.facebook.com/share/p/rC8etYZzR9Ms1bwq/?mibextid=oFDknk
3. அவசரக் கூட்டம்
24 மணி நேர கால அவகாசத்தில் அறிவிப்பு கொடுத்து கூட்ட வேண்டும். (உதாரணம் : வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (மற்றும்) இதர அவசரமான நிவாரணப் பணிகள் குறித்து முடிவெடுத்தல்). பத்து ரூபாய் இயக்கம்
4. வேண்டுகோள் கூட்டம்
1. பொதுவாகக் கூட்டம் கூட்டுவதும், கூட்டத்தில் கலந்துபேச வேண்டிய பொருட்களை கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் சேர்க்கும் கடமையும் பொறுப்பும் தலைவரைச் சார்ந்ததாகும்.
அன்புடன்:
ரா.செல்வம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மாற்றத்திற்கான திறனாளிகள் அணி,
பத்து ரூபாய் இயக்கம்,
(தகவல் - உரிமை - சட்ட ஆர்வாளர்கள் அமைப்பு)
பாலக்கோடு
தருமபுரி மாவட்டம்.
+91 76039 51243
(வாட்ஸ்அப் மட்டும்).
No comments:
Post a Comment