*Emirates Puduvalasai Association (EPA)*
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
May 26, 2024 (ஞாயிற்று கிழமை) நமதூரை சார்ந்த அமீரகத்தில் வசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் 85-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
EPMA & PDA என்ற இரு அமைப்புகளாக செயல்பட்டுவந்த அமீரக சகோதரர்கள். கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு கடந்த நான்கு வருடங்களாக பல்வேறு காரணங்களால் செயல்பட முடியாத தொய்வு நிலை ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டும், இரண்டு இயக்கங்களாக செயல்படுவதால் ஏற்படும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து; இரண்டையும் ஒன்றிணைத்து ஒரே அமைப்பாகவும், இன்னும் வீரியமாகவும் செயல்படுவதில் தான் ஊருக்கும், ஊரின் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஊரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டது.
கல்வி, மருத்துவம், வாழ்வாதர உதவி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என பல துறைகளில் ஊரில் உள்ளவர்களுக்கும், அமீரகத்தில் உள்ளவர்களுக்கும் பயன்பெறும் பல திட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து EPMA & PDA இரு அமைப்பையும் இணைத்து ஒற்றை அமைப்பாக புனர் நிர்மாணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
அமீரகத்தில் வசிக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக *Emirates Puduvalasai Association (EPA)* என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுவோம் என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இதற்காக புதிய நிர்வாக தேர்ந்தெடுப்பு நடைபெற்று, கீழ்காணும் நமதூர் சகோதரர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
*Emirates Puduvalasai Association - நிர்வாகிகள்.*
தலைவர்: ஜனாப். ஜாபிர் ஹுசைன்
துணை தலைவர்: ஜனாப். ஜெய்னுல் ஆபுதீன்
செயளாலர்: N. முஹம்மது பைசல்
துணை செயளாலர்: ஜனாப். ஹாஜா உல்முதீன்
பொருளாளர்: ஜனாப். சிக்கந்தர் பாதுஷா
செயற்குழு உறுப்பினர்கள்:
1. ஜனாப். ரிமோஸ் கான்
2. ஜனாப். சைபுர் ரஹ்மான்
3. ஜனாப். ஜமாலுதீன்
4. ஜனாப். அபுரார் அஹமது
5. ஜனாப். சகுபர் அலி
6. ஜனாப். ஜஹாங்கீர்
7. ஜனாப். வஜஹர் அலி
8. ஜனாப். B. அஹமது பைசல்
9. ஜனாப். ஜமீல் அஹமது
10. ஜனாப். அஸ்பர்
11. ஜனாப். ஜிஹாது
12. ஜனாப். சஹாபுதீன்
13. ஜனாப். சுல்த்தானுல் ஆரிபீன்
14. ஜனாப். நூருல் ஹஸன்
15. ஜனாப். சாகுல் ஹமீது
16. ஜனாப். ரிஸ்வான்
17. ஜனாப். அஃப்ஸல்
தணிக்கையாளர்கள்:
1. ஜனாப். ஜாபர் அலி
2. ஜனாப். அன்வர் ராஜா
3. ஜனாப். ஆதம்
4. ஜனாப். அப்துல் ஹலீம்
5. ஜனாப். ரியாஸ்
6. ஜனாப். நசீர் ஹுசைன்
அல்ஹம்துலில்லாஹ்!!
மிகச்சிறப்பான முறையில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை நமதூர் சகோதரர்களோடு, புதுவலசை குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும், கலந்துரையாடி மகிழ்ந்தது; அனைவருக்கும் மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது.
இந்த நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த ஒருங்கிணைப்பு குழு சகோதரர்களுக்கும், பொருளாதார உதவி செய்த நல் உள்ளங்களுக்கும், ஊரின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு இந்நிகழ்வில் கலந்து கொண்ட நமதூர் சகோதரர்கள் அனைவருக்கும் புதிய நிர்வாகிகள் மட்டும் உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
நமதூரின் முன்னற்றம் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணப்படுவோம். இன்ஷா அல்லாஹ்.
இப்படிக்கு
ஜாபிர் ஹுசைன்
தலைவர்
Emirates Puduvalasai Association (EPA)
No comments:
Post a Comment