*"இயன்றதைச்செய்வோம் இயலாதவர்களுக்கு"*
என்ற லட்சியத்துடன் அமைப்புகள் ஒவ்வொன்றையும் இயக்கி இழுத்துச்செல்லும் இயந்திரமாக தன்னலமற்ற ஒரு சிலர் ஆங்காங்கே மிகத்தீவிரமாக உழைப்பதை நாம் பார்க்கலாம். அவர்களின் கரங்களை வலுப்பபடுத்துவது நம் அனைவரின் கடமையும் ஆகும்.
*சமூக அக்கறை மிக்கவர்களின் அர்ப்பணிப்பு அடித்தட்டு மக்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தி மகத்தான மாற்றங்களை கொண்டு வருகின்றன.*
கல்வி உதவிகள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வட்டி இல்லா கடன், விதவைகளுக்கான சிறுதொழில் உதவிகள் மற்றும் பயிற்சிகள் , பெண்களுக்கான தையல் பயிற்சி, சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க மரம் நடுதல், போதை பழக்கத்திற்க்கு எதிரான தொடர் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகள்.
நீண்ட கால இலக்குடன் தொய்வில்லாமல் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற பணிகள் விளிம்பு நிலை மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை சுய மரியாதையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கின்றன.
உழைப்பதற்கு தயாராக இருந்தும் தங்களுக்கு வழிகாட்டி கைதூக்கிவிட யாருமில்லை என்று ஏங்குபவர்கள் வெட்கத்தை விட்டு வெளியே சொல்லாமல் காத்துக் கிடக்கின்றனர்.
*இளைஞர்கள் கொஞ்சம் இரக்கம் காட்டினால் தொலைநோக்குடன் திட்டமிட்டு பணியாற்றினால் ஊரில் ஏழ்மையை நிரந்தரமாக அகற்றிவிட முடியும்.*
மாணவர்களின் உயர்கல்வி நிதியுதவியும், இளைஞர்களுக்கான திறன்மேம்பாடுப் பயிற்சிகளும் (Skill Development), பெண்களின் அறிவை நேரத்தை உழைப்பை மிகச்சரியாக பயன்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களும் தான் இன்றைய சமுதாய அமைப்புகள் மற்றும் ஊழியர்களின் முதன்மை இலக்கு.
*இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள உங்களால் எந்த வகையில் உதவிட முடியுமோ அந்த வகையில் உதவி செய்யுங்கள்.*
*அதை வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டும் என்ற நிய்யத்துடன் செய்யுங்கள்.இறைவன் கிருபை செய்வான்.*
நமது மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
இம்மையிலும் மறுமையிலும் நமக்கு வெற்றி கிடைக்க வல்ல இறைவன் கிருபைசெய்வானாக ஆமின்!!!
No comments:
Post a Comment