அனுபவத்தின் ஆழம்
50 வயதுக்கு மேல் உயிர்த்த மனித அறிவு. இன்றைய சமுதாயத்தில், 50 வயதை கடந்தவர்களை "இப்போது ஓய்வு பெற்றவர்" அல்லது "வயதானவர்" என்று பொதுவாக பார்க்கும் ஒரு மனநிலை காணப்படுகிறது.
நம் சமூகத்தின் பெரும்பகுதி, 50 வயதுக்குப் பிறகு அவர்களின் அறிவை, ஆற்றலை, மற்றும் அனுபவத்தை மறந்துவிடுகின்றது. இளைஞர்கள் பலர், "இவர்களுக்கு ஒன்றும் தெரியாது" என்ற எண்ணத்தில் தங்கள் மூத்தவர்களின் கருத்துகளை புறக்கணிக்கின்றனர். ஆனால் உண்மையில், அனுபவம் என்றால் என்ன? என்பதை அறியாமல் இந்தச் சூழலில் பிழைக்க முடியாது.
அனுபவத்தின் உண்மை முகம்
கற்றல் என்பது மிகவும் முக்கியமானது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால், அனுபவம் என்பது கற்றலுக்கு இணையான அல்லது அதையும் மீறிய ஒரு தகுதி. அனுபவம், நேரில் சந்தித்த சவால்கள், தோல்விகள், வெற்றிகள், மற்றும் வாழ்க்கையின் கடுமையான பாடங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மட்டுமே பெறப்படும் அறிவாகும்.
அனுபவமிக்க மூத்தவர்கள் தங்களது பல ஆண்டுகள் கொண்ட நிஜ வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டவை, இன்றைய சமூகத்தின் அதிகப்படியான சிக்கல்களை எளிதாக கையாளத் தெரிந்தவர்களாக உள்ளனர். அவர்கள் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்கள், தங்கள் தோல்வி களன்கள் மற்றும் வெற்றிகளின் யுக்திகள், இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
அனுபவம் என்பது கல்வியில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுக்கவே கற்றுக்கொள்ளும் ஒரு அறிவுத்துறையாகும். ஒரு புத்தகத்தில் இருந்து நாம் தேர்ந்தெடுக்கும் அறிவுக்கும், தசாப்தங்கள் ஓரமாக நடந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அனுபவப் பாடங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.
ஒருவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், எதிர்ப்புகளையும், மற்றும் போராட்டங்களையும், சாதனைகளையும் அனுபவித்த பின் அவர்கள் கற்று தேர்ந்த அந்த அனுபவ ஆசான்களாக மாறி நிற்கின்றனர். அவர்களால் மட்டுமே சிக்கல்களை சிறந்த முறையில் எவ்வாறு கையாள்வது என்று கற்றுதரமுடியும்.
இன்றைய தலைமுறை மூத்த தலைமுறையிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லையெனில், உண்மையிலேயே பல துரதிருஷ்டவசமான தவறுகளையும், இழப்புகளையும் சந்திக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.
விரைவில்....
இந்த புத்தகம் உங்கள் உள்ளங்களின் வழியே ஊடுருவி; இப்பிரபஞ்சத்தின் வெற்றி வாயிலுக்குள் நுழைய உங்களை இழுத்து செல்லும் என்று நம்புகின்றேன்.
No comments:
Post a Comment