அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 13 November 2024

காலையில் எழு மணிக்கு

காலையில் ஏழு மணிக்கு 
மதரஸா சென்ற சமுதாயம் – இன்று 
பள்ளி வாகணத்திற்காக காத்து நிற்கிறது.☝🏻🥺

எச்சரிக்கை....
குர் ஆன் ஓதத் தெரியாத ஒரு சமூகம்
உருவாகிக்கொண்டிருக்கிறது

மாலையில்
வீட்டில் ஓதிய எமது சமூகம் –இன்று
டியூசன் சென்று கொண்டிருக்கிறது.

எச்சரிக்கை....
பாங்கின் ஓசைக்கு
பதில் கொடுக்கத்தெரியாத ஒரு சமூகம்
உருவாகிக்கொண்டிருக்கிறது
 
பள்ளிக்கூடம் விட்டதும்
மாலை நேர மதர்ஷா சென்ற சமூகம்  இன்று
தெருமுனைகளில் பலர் சூழ அரட்டையில்...
பொழுதை போக்குகிறது

எச்சரிக்கை.....
இஸ்லாம் தெரியாத ஒரு சமூகம்
உருவாகிக்கொண்டிருக்கிறது

பருவம் வரா சிறுவனிடம்  இன்று
பல பாலியல் படங்கள் சாதாரணமாக
அத்தா ஆசையாய் வாங்கிக் கொடுத்த
ஆன்ட்ராய்டு. போனில் குரூப் ஷாட்டில்

எச்சரிக்கை....
இறைமறை  தெரியாத ஒரு சமூகம்
உருவாகிக் கொண்டிருக்கிறது

அத்தா அயல்நாட்டில்..
அம்மா டிவி நாடகத்தில்
பிள்ளை தெரு முனைகளில்..

எச்சரிக்கை....
மார்க்கம் தெரியாத ஒரு சமூகம்
உருவாகிக் கொண்டிருக்கிறது
                           
கைப்பந்து,கால்பந்து, கிரிக்கெட் என
மும்முரமாய் எம் சமூகம் தவறில்லை ஆனால்
பள்ளிவாசலுக்கு அழைத்தால் மட்டும்
நேரமில்லை என்ற பதில்....

எச்சரிக்கை....
தொழத்  தெரியாத ஒரு சமூகம்
உருவாகிக் கொண்டிருக்கிறது

மகனைத் திருத்த முடியா தந்தை
மனைவியை கண்டிக்க இயலா கணவன்
கண்ட்ரோல் இல்லா குடும்பம்.

எச்சரிக்கை.....
ஒழுக்கம் இல்லாத ஒரு சமூகம்
உருவாகிக் கொண்டிருக்கிறது
 
தன் கெத்தைக் காட்ட
வேகமாக ஓடும் மோட்டார் பைக்
மங்கையர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே
தலையில்,கரையான் தின்றது போன்ற முடி..

எச்சரிக்கை....
கஷ்டம் தெரியாத ஒரு சமூகம்
உருவாகிக் கொண்டிருக்கிறது

சப்தமில்லாமல் ஒரு சமூகம்
வீணாய் போய்க்கொண்டிருக்கிறது
பெற்றோர்களே உங்களால்தான்
உருவாகிக்கொண்டிருக்கிறது...

எச்சரிக்கை.....
சமூகத்தாலே ஒரு சமூகம்
வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது

காலம் கடக்கும் முன்....
நீங்கள் விழித்துக் கொண்டால்....
 நம் சமூகத்தை காத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் குழந்தைகள் வளர வளர

உங்களை விட்டு விலகிச்
சென்று கொண்டிருக்கின்றார்கள்.

எச்சரிக்கை..! கவனம்..!
   
பெற்றோர்களே
பேணிக் கொள்ளுங்கள்
அவசியமாக.... அவசரமாக....

எம் சமூகம் சரியாய் வளர
பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம்...

இறைவனோடு மட்டும்
தொடர்பை ஏற்படுத்துங்கள்... 
அதற்கு பள்ளிவாசலோடு மட்டும்
தொடர்பை ஏற்படுத்துங்கள்... 

பாங்கு சொன்னவுடன்
பள்ளிக்கு வரச் சொல்லுங்கள்.

எம் சமூகம்
இன்ஷா அல்லாஹ்...
நிச்சயம் இந்த உலகை ஆளும்..☝🏻💯
இன்ஷா அல்லாஹ்...☝🏻🤍

No comments:

Post a Comment