பொருத்தமான நேரத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் வரை உங்கள் பிரார்த்தனைகளைக் கூட அல்லாஹ் நிறைவேற்றவில்லை என்றே எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.
பொருத்தமான நேரத்தில் அவன் உங்களுக்கு எது தேவையோ அதனை தருகின்ற போது புரியும், நீங்கள் கேட்ட போதே அது கிடைத்திருந்தால் இது போன்று அழகானதாக அந்த சந்தர்ப்பம் அமைந்திருக்காதென்று..
சில போது பிரார்த்தனைகளின் பிரதிபலன்கள் தாமதமாகலாம், ஆனால் ஒரு போதும் அவை பயனற்றுப் போவதில்லை.
இது வேண்டுமென்பது நமது விருப்பம், அது அப்போது கிடைக்காமல் இருக்க வேண்டுமென்பது நமது ரப்புடைய விருப்பம். எமக்கு எது தேவையோ அது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் நமது ரப்புக்கோ நமக்கு எது ? எப்போது ? தேவை, அது அப்போது நமக்கு பொருத்தமானதா ? இல்லையா ? என்று எல்லாம் தெரியும்.
அவன் தராமல் இருக்கமாட்டான், அவன் தரும்போது அதனை நீங்கள் பொருந்திக் கொள்ளாமல் இருக்கமாட்டீர்கள்.
அவன் தரும் போது தருவான். அவன் தருவதை மட்டுமல்ல, அவனது தீர்மானத்தையும் சேர்த்து அதிகப்படுத்தியே தருவான்.
நிச்சயம் நீங்கள் பொருந்திக் கொள்வீர்கள்.
No comments:
Post a Comment