புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட +2
மாணவிக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இதனையடுத்து
சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சர்கள் மாணவியை நேரில்
சந்தித்து ஆறுதல் கூறினர். இதனிடையே மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் மீது
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
புதுச்சேரி உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1ந் தேதி மாணவி
மாயம் ஆன போது அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை
உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவிக்கு இந்த சோகம்
நேர்ந்திருக்காது என்று புதுவை மக்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மிக
அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று 2வது நாளாக இன்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து திமுக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் இன்றும் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று தலைமைச் செயலகத்தை
முற்றுகையிடவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment