
டில்லியில், இரண்டு
நாட்களுக்கு முன், ஓடும் பஸ்சில் பெண்ணிடம், கண்டக்டர் ஒருவர் பாலியல்
பலாத்காரத்திற்கு முயன்றதாக, தகவல் வெளியானது. இது தொடர்பாக, கண்டக்டர் ரஞ்சித்
சிங் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம், போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கண்டக்டர் மீது
புகார் செய்த இளம் பெண், டில்லியைச் சேர்ந்தவர். இவரது தந்தை, மூன்று திருமணங்கள்
செய்து கொண்டவர். தற்போது, மூன்றாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
இதனால், இவர்களின் வீட்டில், அடிக்கடி தகராறு நடக்கும். ஆறு மாதங்களுக்கு முன்,
இந்த பெண்ணின் சகோதரன், இந்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதைத்
தொடர்ந்து, அந்த பெண்ணிடம், அவரின் சகோதரன், மீண்டும் மீண்டும் தவறாக நடக்க
முயற்சித்துள்ளான். இதனால், அந்த பெண், வீட்டை வீட்டு வெளியேறியுள்ளார். அந்த இளம்
பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது சகோதரனையும் கைது
செய்துள்ளோம்.
as
.thedipaar. thanks
No comments:
Post a Comment