- Friday, 25 January 2013 13:27

ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப் படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுத் தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பிளாட்பாரங்கள், மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.
இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது, குளிப்பது, துணி துவைப்பது, சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரயில்வே சட்டப் பிரிவுப் படி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல், மற்றும் ரயில்களை சேதப் படுத்துவது போன்ற செயல்களை செய்வதும் இந்த சட்டப் பிரிவிகீழ் குற்றமாக கருதப்படும், அவர்களுக்கும் மேற்கண்ட சட்டம் பொருந்தும். எனவே ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க பயணிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment