அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 30 January 2013

சிரியாவில் 79 மனிதப் படுகொலை: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!



on 30 January 2013.
சிரியாவில் நடைபெறும் வன்முறையின் உச்சக் கட்டமாக நேற்று, போர் விதிமுறைகளை மீறி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 79 பேரின் சடலங்கள் சிரியாவின் வடக்கேயுள்ள முக்கிய வர்த்தக நகரான அலெப்போவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கைகள் கட்டப் பட்ட நிலையில்...

தலையில் சுடப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இதற்குக் காரணம் சிரிய அரசின் கடும்போக்கே என்று எதிரணியினர் கூறியுள்ள போதும் உண்மையில் இதற்கு யார் பொறுப்பென உறுதிப்படுத்த முடியாதுள்ளது. அதிபர் அசாத்தின் படைகளும் கிளர்ச்சிப் படடையும் கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் தீவிரமாக அலெப்போ நகரில் மோதி வருகின்றனர்.


அரபு உலகத்தில் மிகவும் ரத்தக்கறை படிந்த வன்முறையாக மாறியுள்ள சிரியப் புரட்சியில் இதுவரை 60'000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா இன் அகதிகளுக்கான அமைப்பின் கூற்றுப்படி 700'000 பேருக்கும் அதிகமான அகதிகள் சிரியாவில் இருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


இதேவேளை உலகில் உள்ள வல்லரசுகள் சிரியாவில் நடைபெறும் வன்முறை அண்டை நாடுகளான லெபனான், ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகியவற்றுக்கும் பரவி விடக்கூடுமோ எனும் அச்சத்தில் உள்ளன. மேலும் தற்போது மரணதண்டனை நிறைவேற்றப் பட்டு அலெப்போவின் கியூயெயிக் ஆற்றில் சேறு படிந்த நிலையில் 51 சடலங்கள் மீட்கப்பட்ட வீடியோவை எதிரணியினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.


இதில் அதிகமானோர் பருவவயதைச் சேர்ந்த பயிற்சி எடுத்து வந்த இளம் போராளிகள் ஆவர். இன்னொரு பக்கத்தில் அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இரு ஏவுகணை எதிர்ப்பு வாகனங்களையும் 400 துருப்புக்களையும் துருக்கியின் அங்காரா நகருக்கு அனுப்பியுள்ளனர். இதன் நோக்கம் சிரிய இராணுவத்தால் துருக்கிக்கு ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதனால் ஆகும்.

News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment