அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday 30 January 2013

தடை தொடரும்' : நீதிமன்றம், 'சில காட்சிகளை நீக்கத் தயார்' : கமல்ஹாசன்



விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என உயர் நீதிமன்றம் இன்று  அறிவித்துள்ளது.

விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தனி நீதிபதி வெங்கட்ராமன் இத்தடையை விலக்குவதாக நேற்றிரவு தீர்ப்பு வழங்கினார். எனினும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேன்முறையீடு செய்தது.

இன்று மதியத்துக்கு மேல் இந்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன் போது நீதிபதிகள் எலிபி தர்மராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை விலக்கி, தனி நீதிபதி வெங்கட்ராமன்  நேற்று வி பிறப்பித்த உத்தரவை இரத்து செய்வதாக் நீதிபதிகள் இருவரும் தீர்ப்பு கூறினர். இதனால், விஸ்வரூபம் படத்தின் மீதான தடை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை இத்தீர்ப்பை எதிர்த்து,  எதிர்வரும் திங்கட்கிழமை கமல்ஹாசன் மீண்டும் Counter Plea தாக்கல் செய்யலாம் எனவும், புதன்கிழமைக்குள் உச்சநீதிமன்றத்தின் மூலம் இறுதி முடிவு வெளியாகும் எனவும் நீதிமன்ற தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

 சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு கமல்ஹாசனும் தீர்மானித்திருப்பதாக India Times ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இஸ்லாமிய சகோதரர்களுடன்  ஒருங்கிணைந்து போக தான் விரும்புவதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், நட்பு ரீதியில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

'எந்தெந்த காட்சிகள் ஆட்சேபணைக்குரியது எனவும், எந்தெந்த சொற்கள் நீக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு பட்டியல் கொடுத்துள்ளனர். அவர்கள் கோரிக்கையை ஏற்க தீர்மானித்துள்ளேன். இத்திரைப்படம் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து பரப்படுவதாக தவறான புரிந்துணர்வு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. இது இந்திய இஸ்லாமியர்கள் பெருமைப்பட வேண்டிய படம்' என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பட விவகாரத்தினால் ஏற்படும் வன்முறை சம்பவங்களை கேள்விப்படுகையில் மிகவும் வேதனைப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழ்நாடு அரசினதும், காவல்துறையினரதும் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

4tamilmedia thanks

No comments:

Post a Comment