
கர்நாடகா மாநிலம் பரப்பரனா அக்ரஹார சிறையில் அநியாயமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனியை நாஸருத்தீன் எழமரம் சந்தித்தும் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக உரையாடினார். அவருடன் கர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவர் அப்துல் வாஹித் சேட்டும் உடன் சென்றார்.
அப்துல் நாஸர் மஃதனியை சந்தித்துவிட்டு நாஸருத்தீன் அளித்த பேட்டியில் கூறியது:
சிறையில் அப்துல் நாஸர் மஃதனி கடுமையான நீதி மறுப்புக்கு பலியாவது, யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதே காரணம் ஆகும். சி.பி.எம், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு மஃதனி மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது ஆத்மார்த்த ரீதியாக அணுகுமுறை இருக்குமானால், முதலில் யு.ஏ.பி.ஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை துவங்கவேண்டும். இது தவிர நடத்தும் அனைத்து முயற்சிகளும் நகைக்கத்தக்கதாகும்.
மஃதனியை விடுவிப்பதற்கான எந்த முயற்சிகளும் வெற்றி அடையாததன் பின்னணியில் அடிப்படை காரணம் யு.ஏ.பி.ஏ என்ற உண்மையை போராட்டக் களத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு நாஸருத்தீன் கூறியுள்ளார்.
thoothu
muslimcn. thanks
No comments:
Post a Comment