
பகிரங்கமாக அறிவிக்க...
டெல்லியில் 23 வயது
மாணவி கற்பழிக்கப்பட்டு பலியான சம்பவம் குறித்து, இணையதளத்தில் (டுவிட்டர்) அவர்
கருத்து தெரிவித்து இருக்கிறார்.அதில் கற்பழிக்கப்பட்ட மாணவியின் பெயர், விவரங்களை
ரகசியமாக வைத்து இருப்பது பற்றி கேள்வி எழுப்பி இருக்கும் அவர், அந்த விவரங்களை
பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்.
பெயர் சூட்டி கவுரவம்
‘‘கற்பழிப்புக்கு
எதிரான குற்றங்களை தடுக்கும் சட்டம் வலுவானதாக திருத்தி அமைக்கப்பட இருக்கிறது.
மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், திருத்தப்பட்ட புதிய
சட்டத்திற்கு, அந்த மாணவியின் பெயரை சூட்டி கவுரவிக்க வேண்டும்’’ என்றும், சசிதரூர்
யோசனை தெரிவித்து இருக்கிறார்.தற்போதைய சட்டத்தின்படி, கற்பழிக்கப்பட்ட பெண்ணின்
பெயர் விவரங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நிலையில் இணைய
தளத்தில் டெல்லி மாணவி விவகாரம் குறித்து சசிதரூர் வெளியிட்டு இருக்கும் கருத்து
புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வரவேற்பு–எதிர்ப்பு
மந்திரியின்
கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணைய தளத்தில் பலர் கருத்து தெரிவித்து
உள்ளனர். சசிதரூரின் யோசனையை வரவேற்று சிலர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.எதிர்ப்பு
தெரிவித்துள்ள சிலர், ‘‘குற்றவியல் நீதித்துறையில் உண்மையான மாற்றங்களை
கொண்டுவருவதை விடுத்து, அந்த மாணவியை கவுரவப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில்
ஈடுபடுகிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
கிரண்பெடி ஆதரவு
சசிதரூரின் யோசனையை
வரவேற்றுள்ள அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பெடி, புதிய சட்டத்திற்கு மாணவியின்
உண்மையான பெயர் அல்லது மக்கள் அவரை குறிப்பிடும் ‘நிர்பயா’ என்ற புனை பெயரை சூட்ட
வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். இதன் மூலம் வருங்காலத்தில் இதுபோன்ற
களங்கத்தை நீக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கிறார்.
as
thedipaar thanks
No comments:
Post a Comment