on 24 January 2013.
ஏவுகணை
ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்த காரணத்தால், இந்த அறிவிப்புக்கு வெயிட் அதிகமாகிறது.
வட கொரிய அரசுக்கு சொந்தமான KCNA (Korean Central News Agency) செய்தி மையத்தில்
இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், இது வட கொரிய அரசின் அதிகாரபூர்வ
அறிவிப்பு என எடுத்துக்கொள்ளலாம்.
அதே
அறிக்கையில், “எமது புதிய ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவை இலக்கு வைக்கும் அளவில்
தயாரிக்கப்படுவதன் காரணம், அமெரிக்கா, கொரிய மக்களின் நிரூபிக்கப்பட்ட எதிரி”
என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) வெளியான இந்த அறிக்கைக்கு அமெரிக்கா
உடனடியாக பதில் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின்,
கொரி விவகாரங்களுக்கான ராஜதந்திரி க்ளென் டேவிஸ், “கொரியா பகுதியில் பதட்டத்தை
ஏற்படுத்த இது தகுந்த நேரமல்ல. அதை வட கொரியா முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்றுமோர் ஏவுகணை பரிசோதனையை அவர்கள் நடத்தினால், அது அவர்களுக்கே மிகப்பெரிய
இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தவறாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
News: Source
eutamilar. thanks
No comments:
Post a Comment