ராமநாதபுரம், பிப்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் மீது கடந்த வாரம் வேகமாக வந்த வேன் மோதியது. இதில் அங்கு நின்ற ஒருவரும் பலியானார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு இந்த கேட் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக மூடப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் சேது எக்ஸ்பிரஸ் உச்சிப்புளி கேட்டை கடந்ததும் கேட் கீப்பர் கேட்டை திறக்க முற்பட்டார்.
அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த சரக்கு வேன், கேட் முழுமையாக திறப்பதற்குள் வந்து மோதியது. இதில் கேட்டில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து ராமேசுவரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு, உச்சிப்புளி ரெயில் நிலைய அதிகாரி தகவல் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வேன் டிரைவர் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

news maalaimalar thanks
No comments:
Post a Comment