- Saturday, 16 February 2013 05:27

அசாமில் கோல்பாரா மற்றும் காம்ப்ரூப் மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து நடைபெற்ற கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
அசாமில் பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. கோல்பாரா மற்றும் காம்ப்ரூப் மாவட்டத்தில் ரபா என்கிற பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவற்றை ஒருங்கிணைத்து தன்னாட்சி அதிகாரம் படைத்த கவுன்சில் அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த கவுன்சிலுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று, என்று ரபா பழங்குடியினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கவுன்சில் தேர்தல் நடத்தாமல், உள்ளாட்சி தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செவ்வாய் கிழமை ரபா பழங்குடியினர், போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது
பல கிராமங்களில் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பயங்கர ஆயுதங்களால் அரசு அதிகாரிகளையும், உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தோர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் படை குவிக்கப்பட்டது. துப்பாக்கி சூட்டில் 13 பேரும், மோதலில் 6 பேரும் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன இதைத் தொடர்ந்து கலவர பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளை இழந்த மக்களுக்காக 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 10 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். கலவரம் பரவிய 2 மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment