- Saturday, 16 February 2013 05:53
தேர்தல் வியூகம் அமைப்பது குறித்து, மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல்காந்தி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் கட்சியின் 2ம் நிலைக்கு இப்போது உயர்ந்துள்ளார். ராகுல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கட்சியில் செல்வாக்கை உயர்த்த திட்டம் வகுத்துள்ளார். இந்த ஆண்டில் 10 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.
ஆகவே மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் 2 நாள் ஆலோசனைக் கூட்டத்தை அவர் நேற்று டெல்லியில் தொடங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரசின் நிலை குறித்து அந்தந்த மாநில தலைவர்கள் விளக்கம் அளிக்க உள்ளார்கள்.
உத்திரப்பிரதேஷ், பீஹார், குஜராத், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய பெரிய மாநிலங்களில் காங்கிரசின் நிலை படு மோசமாக உள்ளது. ஆந்திராவில் தெலுங்கனா விவகாரத்தால், அதன் செல்வாக்கு மங்கியுள்ளது. இந்த விவகாரங்கள் அனைத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.
4tamilmedia thanks
No comments:
Post a Comment