காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள். விரக்தியில் நிர்வாணமாக நடுரோட்டில் நின்ற சீன ஜோடி.
23 February 2013 05:54:46 AM படித்தவர்கள்: 144
காதலை ஏற்க
மறுக்கும் சில பெற்றோர் தங்களின் மகள் அல்லது மகனுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை
விதிப்பதுண்டு. அதுபோல சீனாவிலும் காதல் வயப்பட்ட ஒரு இளம் ஜோடிக்கு அவர்களது
பெற்றோர், ‘இனி நீங்கள் நேரில் சந்திக்கவே கூடாது’ என கட்டுப்பாடு
விதித்தனர்.
இதனால் விரக்தி
அடைந்த இளம் ஜோடி போக்குவரத்து நிறைந்த கூயாங்ஷிஹோவூ நகரிலுள்ள மேம்பாலத்தில் ஏறி
திடீரென்று ஆடைகளை கழற்றி வீசி விட்டு ஒருவரை, ஒருவர் இறுக கட்டிப் பிடித்தபடி
நிர்வாணமாக நின்றனர். அதை வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்தபடி சென்றதால்,
போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போலீசார்
விரைந்து வந்து ஜோடியை அழைத்து சென்று போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி
வைத்தார்கள்.
பொதுவாக
போக்குவரத்தை முடக்கும் விதமாக சீனாவில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கிறது. ஆனால்
பொது இடத்தில் நடந்த நிர்வாண போராட்டம் அதிர்ச்சி தருவதாக இருப்பதாக போலீஸ் அதிகாரி
ஒருவர் கூறினார். ஆனால் இளம் ஜோடியோ தங்களுடைய போராட்டத்தை நியாயப்படுத்தினர்.
‘எங்களுடைய காதல் நெருக்கத்தை யாராலும் பிரிக்க முடியாது என்பதை உணர்த்தவே இந்த
போராட்டத்தை நடத்தினோம். இதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று
வாதிட்டார்கள்.
No comments:
Post a Comment