ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்: வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரான்ஸ் ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2013, 11:20.55 மு.ப GMT ]
பிரான்ஸ் நாட்டில் ஓரின
சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கும், அவர்கள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவும்
அங்கீகாரம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தான்
வெற்றி பெற்றால் ஓரின சேர்க்கையாளர் திருணத்துக்கு அங்கீகாரம் அளிப்பேன் என்று
பிரான் கோயில் ஹோலண்டே உறுதி அளித்தார்.
அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி பதவி ஏற்றதும் அதை நடைமுறை படுத்தும்
நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் குடியரசு கட்சியினரும், சமூக
சேவை ஆர்வலர்களும் கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.
ஆனால், அதை பொருட்படுத்தாத ஹோலண்டே ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை
அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடந்தது. பின்னர் நடந்த
ஓட்டெடுப்பில் 249 ஓட்டுகள் பெற்று மசோதா நிறைவேறியது.
இதன் மூலம் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக 97 ஓட்டுகளே கிடைத்தன.
சட்டம் நிறைவேறியதை தொடர்ந்து பிரான்ஸ் நகரங்களில் ஓரின சேர்க்கையாளர்கள்
மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் கண்டன பேரணி நடத்தினார்கள். தற்போது
நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பிரான்சில் அனைவருக்கும் சம உரிமை, சம
அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment