அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 28 February 2013

போர்க்குற்றவாளியான பங்களதேஷ் தலைவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையின் எதிரொலியா இடம்பெற்ற வன்முறையில் 34 பேர் பலி


[ வெள்ளிக்கிழமை, 01 மார்ச் 2013,
1971 ஆம் ஆண்டு சுதந்திரம் வேண்டி பாகிஸ்தானிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாமிய கட்சியின் துணைத் தலைவர், தல்வார் ஹூசைன் சயீதி மீது போர்குற்றம் சுமத்தப்பட்டது.



தீப்பொறி இஸ்லாமிய பேச்சாளரான சயீதி மீது அப்போது, இந்து கிராமத்திற்குள் புகுந்து கலகம் ஏற்படுத்துதல், இந்து சகோதரிகள் 3 பேரை கடத்தி கற்பழித்தல், மதம் மாற்றம் செய்தல், கொள்ளை அடித்தல், கலகம் ஏற்படுத்துதல் போன்ற வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.  
அவர் ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பாக 1996-2008 ஆண்டுவரை எம்பியாகவும் இருந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு அவர் மீது, சர்வதேச நீதிமன்றம் 20 குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்நிலையில், பங்களதேஷ் அரசில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, சயீதி இன்னும் 90 நாட்களுக்குள் தூக்கிலிடப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பங்களதேஷ் முழுவதும் ஜமாத் இ இஸ்லாமியக் கட்சியினர் அரசுக்கு எதிராக நேற்று வன்முறையில் இறங்கினர்.
இதில் 4 பொலிஸார் உட்பட 20ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்கலவரத்தில், இந்துக்கள் கிராமமும், கோவில்களும் சூறையாடப்பட்டன.  இது, கடந்த இருபது வருடங்களில் இல்லாத மிகமோசமான வன்முறை என்று சொல்லப்படுகிறது.

newsonews. thanks

No comments:

Post a Comment